Home (Malayalam)

என் தோழியின் பரிந்துரையின் பேரில் நான் சமீபத்தில் பார்த்த திரைப்படம் "Home".

மலையாள படங்களின் மேக்கிங், நடை முதலியவை எனக்கு பழக்கம் ஆதலால் படத்தின் வேகம் என்னை பெரிதும் பாதிக்கவில்லை. கதை என்னவாக இருக்கும் என்பது படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நமக்குத் தெரிந்துவிடுகிறது எனினும் அக்கதை யாரை எல்லாம் அழைத்துக் கொண்டு  எங்கெல்லாம் பயணம் செய்து முடியப்போகிறது என்பதைத்  தான் நாம் அடுத்த 2:45 மணி நேரம் பொறுமையாக பார்க்க வேண்டிய இருக்கிறது.

இன்றைய கால கட்டத்தில் நாம் அனைவருமே தொழில் நுட்பத்தால் ஆட்டி வைக்கப்படும் கைப்பாவைகள் தான், கைபேசியின் அடிமைகள் தான் அதில் சந்தேகம் ஒன்றும் இல்லை அதிலிருந்து அவ்வப்போது வெளிவருவது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவருக்கும் நலம் பயக்கும் என்பதை இயக்குனர் போதனைப் படமாக இல்லாமல் ரசிக்கும் படி சொல்ல முயன்றிருக்கிறார்.

திரைக்கதை தான் இத்திரைப்படத்தின் "Hero". இயக்குனர் Rojin Thomas மிகப் பொறுமையாக அதை வடிவமைத்திருக்கிறார். மலையாளப் படங்கள் என்றால் கண்ணுக்கினிய காட்சிகளுக்கும் அதோடு இணைந்த  இனிய பாடல்களுக்கும்  என்ன குறை?  

நான் பல முறை குறிப்பிட்டது போல மலையாளப் படங்களை தாங்கி நிற்பவர்கள் அவர்களின் "Supporting Actors". இத்திரைப்படத்தில் அனைவருமே அப்படிப்பட்டவர்கள் தான் குறிப்பாக Indrans. நாம் அவரை பல படங்களில் பார்த்திருக்கிறோம். பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு "Oliver Twist" என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் செய்யும் செய்யும் சேட்டை இருக்கிறதே 😆. கதை அனைத்து கதா பாத்திரங்களின் மீதும் அழகாக பயணிக்கிறது.

தாத்தா கேரக்டர், vlog செய்யும் தம்பி கேரக்டர், முட்டி வலியால் அவதிப்படும் அப்பாவை திட்டினாலும் விட்டுக் கொடுக்காத அம்மா, Insta Story வைத்து காதலனை வெறுப்பேற்றும் பெண்  என்று நம் வாழ்வில் அன்றாடம் பார்க்கும் மனிதர்களைத்தான் இதிலும் பார்க்கிறோம்.

இன்றைய இளைஞர்கள் மனதில் தங்களின் பெற்றோர்களைப் பற்றிய பார்வை எவ்வாறு இருக்கிறது?, தங்களுடைய பிரச்சனைகளை தீர்த்து கொள்ள முகம் தெரியாத முக நூல் நண்பர்களை நாடும் அவர்கள் முகத்திற்கு நேரே வந்து நிற்கும் தாய் தந்தையரை  கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்களா?, மாறும் உலகோடு சேர்ந்து நாமும் மாறாவிட்டால் கூட்டத்திலும் தனி மனிதனாக உணர நேரிடுமா? போன்ற கேள்விகளுக்கு பதிலை மனதைத் தொடும் காட்சிகள் மூலம்  கை தேர்ந்த நடிகர்களின் உதவியோடு சற்று கற்பனையையும் கலந்து  படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.

Emoji மூலம் மட்டுமே தங்களுடைய Feelings ஐ Comfortable ஆக  வெளிக்காட்ட தெரிந்த இளம் தலைமுறையினர் உருவாகி இருக்கிறார்கள் என்பதையும் கோடிட்டு காட்டி சுபத்தில் முடிகிறது "Home" திரைப்படம்.

நேரம் இருந்தால் சனிக்கிழமை மதியம் குடும்பத்தோடு பார்க்கலாம் தப்பில்லை 😀 

Comments

Popular posts from this blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

மகாராஜா