60 வயது மாநிறம்

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, இந்திரஜா மற்றும் பலர் நடித்து 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் "60 வயது மாநிறம்".

"Godhi Banna Sadharana Mykattu" என்ற கன்னட படத்தின் ரீமேக் தான் இந்த "60 வயது மாநிறம்".

ராதா மோகன் படங்கள் என்றாலே மனித உணர்வுகளுக்கும், உறவுகளுக்கும் முதலிடம் உண்டு. இரட்டை அர்த்த வசனங்களோ, முகம் சுளிக்கும் காட்சிகளுக்கோ இடமில்லை. தேவையில்லாத பாடல்களையோ, ரத்தம் தெறிக்கும் சண்டைக்காட்சிகளையோ, தம் கட்டிக்கொண்டு பஞ்ச் டயலாக் பேசும் கதாநாயகர்களையோ பார்க்கவே முடியாது.




யதார்த்தத்திற்கு மிக அருகில் இருக்கும் படங்களே இயக்குனர் ராதா மோகனின் முத்திரை. கதாபாத்திரங்கள் அவ்வப்போது சற்று மிகையாக நடிப்பதாக நமக்குத் தோன்றும் அவ்வளவுதான்!!!

"60 வயது மாநிறம்" திரைப்படத்திலும் இதே Formula-வைத்தான் கையாண்டிருக்கிறார். 

மறதி நோயால் (Alzheimer) அவதிப்படும் அப்பாவாக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். எங்கே ஓவர் ஆக்டிங் செய்து விடுவாரோ என்று பயந்து பயந்து தான் படம் பார்த்தேன் ஆனால் நடை, உடை, பாவனை என்று அனைத்திலும் கதாபாத்திரமாகவே மாறியிருந்தார்.

அப்பாவைத் தொலைத்து விட்டு குற்ற உணர்வுடன் தவிக்கும் , தேடும் மகன் விக்ரம் பிரபு. அவருக்கு உதவும் மருத்துவர் கதாநாயகி இந்திரஜா. இருவரும் நன்றாகவே நடித்திருந்தனர். இவர்களின் காம்பினேஷன் காட்சிகளில் தான் சற்று செயற்கைத்தன்மை எட்டிப் பார்த்தது ஆனால் அது பரவாயில்லை.  

சமுத்திரக்கனியைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? நெகட்டிவ் Shade உள்ள கதாபாத்திரங்களில் அவர் கன கச்சிதமாகச் சென்று அமர்ந்து விடுகிறார். அவர் அறிவுரை சொல்வதை விட அடாவடி செய்வதே அவருக்கும் நமக்கும் நல்லது!!!

ராதா மோகன் படங்களின் ஆஸ்தான நடிகர் இளங்கோ குமரவேல் இதிலும் இருக்கிறார். அவரது வீட்டில் நடக்கும் காட்சிகள் சுவாரசியமாகவும் ரசிக்கும் படியும் இருந்தது. 2018-லேயே இயக்குனர் Home Quarantine - ஐ காட்டி இருக்கிறார்.

பொதுவாக இந்த இயக்குனரின் படங்களில் நகைசுவை அவ்வளவு சிறப்பாக இருக்காது ஆனால் இதில் நகைச்சுவை வசனங்கள் சற்று புன் முறுவலை வரவழைத்தன எனலாம்.

சில பல எதிர்பாரா ட்விஸ்டுகளுடன் முன்னகரும் இத்திரைப்படம் மொத்தத்தில் ஒரு குறும்படத்தை பார்த்த நிறைவைக் கொடுத்தது.

"60 வயது மாநிறம் is a Feel Good Movie".

இதுவரை பார்க்கவில்லை என்றால் Available on Amazon Prime. 

பின் குறிப்பு : இப்படத்தின் இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா 

Comments

Popular posts from this blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

மகாராஜா