Don't Look Up
Leona DiCaprio, Meryl Streep போன்ற பெயர் போன ஜாம்பவான்களின் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் திரையங்குகளில் வெளிவந்த " Don't Look Up" திரைப்படம் ஆஸ்கார் உட்பட பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்த காரணம் ஒன்றே போதுமே இப்படத்தை பார்ப்பதற்கு!!!
Michigan மாகாணத்தில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யும் மாணவியான Jennifer Lawrence ஆல் பூமியை நோக்கி அதி வேகத்தில் வந்து கொண்டிருக்கும், கிட்டத்தட்ட ஆறு மாத காலத்திற்குள் பூமியை தாக்கி அழிக்கவல்ல Comet கண்டறியப்படுகிறது.
இவர்களின் அரிய கண்டுபிடிப்பை உலகம் (அதாவது அமெரிக்கா) எவ்வாறு எதிர் கொண்டு செயலாற்றுகிறது? மக்களும் இந்த உலகமும் காக்கப்பட்டதா? என்பதை நகைச்சுவையுடன் (Satirical Comedy) சொல்லும் திரைப்படம் தான் "Don't Look Up".
கடந்த ஆட்சியில் நாம் தினம் தினம் தொலைக்காட்சிகளில், செய்திகளில் எதைப் பார்த்துக் கொண்டிருந்தோமோ அதையே திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். இதைப் போன்ற ஏராளமான இந்தியத் திரைப்படங்களை பார்த்த நமக்கு இது புதிதாக தோன்றவில்லை எனினும் "Cringe" ஆகவும் இல்லை.
இடர் காலங்களில் மக்களை காக்க போர் கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறும் அரசு பின்னணியில் என்ன செய்கிறது? யாருடைய ஆணையை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது? மீடியாவும் சமூக வலைத்தளங்களும் தங்களுடைய பணியை எவ்வாறு செவ்வனே செய்கின்றன? இவ்வளவு ஏன் மக்களாகிய நாம் அதை எவ்வாறு எதிர் கொள்கிறோம்? போன்ற கேள்விகளுக்கு பதிலை இயக்குனர் Adam McKay நகைச்சுவையும் நையாண்டியும் கலந்து படைத்திருக்கிறார்.
படம் துவங்கி ஒரு மணி நேரம் வரை மிகவும் ரசித்துப் பார்த்தேன் அடுத்து என்ன வருமோ என்ற ஆர்வம் வேறு ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கும் அதையே ஜவ்வாக இழுத்திருப்பது ஏமாற்றமே!!!
ஒரு தடவை பார்கக் கூடிய படம் தான். பார்த்துவிட்டு உங்களுக்கு புரிந்ததை சொல்லுங்கள். மறைந்திருக்கும் செய்திகளை Decode செய்யுங்களேன்?
"Don't Look Up" - இது ஒரு Netflix தயாரிப்பு 😃
Comments
Post a Comment