எதற்கும் துணிந்தவன் (ET)
Netflix-ல் படம் பார்த்து முடித்த கையோடு YouTube - ல் ப்ளூ சட்டை மற்றும் காக்கிஸ் டாக்கீஸ் விமர்சனங்களைப் பார்த்தேன். நான் என்ன எழுத வேண்டும் என்று நினைத்தேனோ அதையெல்லாம் அவர்களே புட்டு புட்டு வைத்திருந்தமையால் சில விவரங்களை Skip செய்து விட்டு கீழ்கண்ட விமர்சனத்தை எழுதுகிறேன்.
கடந்த நான்கு ஐந்து படங்களாகவே சூர்யா கனமான பாத்திரங்களையும் நடைமுறை பிரச்சனைகளை மையமாகக் கொண்ட கதைகளை மட்டுமே தெரிவு செய்து நடிக்கிறார் இருந்தும் படங்கள் அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்படுகிறதா என்றால் இல்லை.
இயக்குனர் பாண்டிராஜின் படங்கள் இதற்கு முன் இந்த அளவிற்கு குளறுபடியாக இருந்ததில்லை. கதாநாயகி வரும் ஓரிரு காட்சிகள், திருவிழா காட்சிகள் தவிர திரைக்கதையில் சுவாரசியம் இல்லை. அதில் நடிக்கும் நடிகர்கள் பரபரப்படைகிறார்கள் ஆனால் நமக்கோ "இப்படியே எத்தனை சீன் தான் வரும்" என்று தோன்றுகிறது.
கதை ஓகேயா என்று பார்த்தால் அது எங்கும் நகரவே இல்லை.
பாண்டிராஜ் படத்திற்கு ஒரு மாஸான பெயரையும் விரல் விட்டு எண்ணக்கூடிய நல்ல காட்சிகளையும் முதலில் எழுதிவிட்டு அதை சுற்றி மையக் கதையை எழுதினாரா என்று தெரியவில்லை (Beast படத்தைப் பார்த்த போதும் இதே எண்ணம் தான் எனக்குள் வந்தது..Actually Beast was a OK Movie)
மொத்தத்தில் "எதற்கும் துணிந்தவன் (ET)"
Cliché வில்லன்
Cringe குணச்சித்திர நடிகர்கள்
Chaotic Climax - போன்ற Combo-க்களால் ஆன வெகு சுமாரான Meals..ஜீரணமாவது கடினம் தான்!!!
"படம் தான் நல்லா இல்லைன்னு ரிலீஸ் ஆன உடனேயே போட்டு உடைச்சுட்டாங்களே அப்புறம் எதுக்கு நீ பார்த்துட்டு இப்படி ஒரு விமர்சனத்தை எழுதுறே" -ன்னு நீங்க கேக்குறது என் காதுல விழுது. ஏன்னா நான் "எதற்கும் துணித்தவள்" 😆😆
பின்குறிப்பு : நான் கடைசியாக எழுதிய வரிகள் தான் நான் விமர்சனம் எழுத வேண்டும் என்று நினைத்ததும் என் மனதில் தோன்றிய முதல் வரிகள். அதை எழுதிவிட்டு தான் மேலே உள்ள விஷயங்களை சேர்த்துக் கொண்டேன் 😀
Comments
Post a Comment