Sharmaji Namkeen (Hindi)

சமீப காலமாக குடும்பப் படங்கள் வரிசையில் குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கும் சிக்கல்களை காட்டுவதோடு மட்டுமல்லாமல் வயதானவர்கள் இந்த நவீன உலகத்தில் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டும் பல்வேறு திரைப்படங்கள் வந்த வண்ணம் உள்ளன அவற்றில் ஒன்று தான் இந்த " Sharmaji Namkeen".




இள வயதில் நாம் நம் குழந்தைகளை அவர்கள் போக்கில் விடுவதில்லை. குடும்ப மரியாதை அவர்களின் எதிர்காலம் என்று கட்டுப்படுத்தி வைக்கிறோம். நமக்கு வயதாகும் போது அதையே அவர்களும் நமக்குத் திரும்பச்  செய்கின்றனர் என்பதை  நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் Hitesh Bhatia.

சராசரியான வேலையில் இருக்கும் ஒருவர் Retirement-குப் பிறகு தனக்கு விருப்பமான காரியங்களில் இறங்குவது என்பது எத்தனை குதிரைக் கொம்பான விஷயம். சமூகம் அவர்களை அந்நியமாகப் பார்ப்பதும் குழந்தைகள் அவர்களை பயனற்றவர்களாகப் பார்ப்பதும் என அவர்களின் நிலைமை பரிதாபம் தான்.

Bobby படத்தில் பால் வடியும் முகத்துடன் அறிமுகமான நமது  ரிஷி கபூரின் கடைசிப்படம் "Sharmaji Namkeen".  படம் முடிவதற்குள் உடல்நலக் குறைவால் அவர் காலமானதால் அங்கங்கே அவரை Replace செய்கிறார் Paresh Rawal.

இருவரும் டைட்டில் ரோலில் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். படத்தின் பல்வேறு காட்சிகளையும் திரைக்  கதையையும் நாம் யூகிக்கும் வர்ணமே இயக்குனர் அமைந்திருந்தாலும் ரசிக்கும் படியாக அதை மாற்றியிருப்பது அதில் நடித்திருக்கும் நடிகர்கள்.

ஜூஹி சாவ்லா -விற்கு வயதாகியிருப்பது அப்பட்டமாகத்  தெரிந்தாலும் அதை மறைக்க முயலாமல் மிக இயல்பான நடிப்பாலும்  தன்னுடைய வழக்கமான Charisma-விலும் நம்மை கவர்கிறார்.

குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய படம் "Sharmaji Namkeen". Available In Prime.

பின் குறிப்பு : நீங்கள் Foody ஆக இருந்தால் இந்தப்படத்தைக்  கூடுதலாக ரசிப்பீர்கள்.

Comments

Popular posts from this blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

மகாராஜா