பொன்னியின் செல்வன் - 1
2007-ம் ஆண்டு என் மகளின் வருகையை எதிர்பார்த்து கொண்டிருந்த தருணம். அவளுக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் என் கணவர் பரிந்துரைத்த பெயர்கள் நந்தினி, வானதி, பூங்குழலி. என்ன இது பட்ட பழைய பெயர்கள் என்று கேட்ட என்னிடம் "காலத்தால் அழியாத கதாபாத்திரங்கள்" என்று பொன்னியின் செல்வன் நாவலைப் புகழ்ந்து பேசினார் என் கணவர்.
2017-ம் ஆண்டு பொன்னியின் செல்வன் நாவலைப் படிக்க நேர்ந்தது. கதையின் கரு பிடித்திருந்தாலும் போக்கு சலிப்பை வரவழைத்தது. என்னால் ஆஹா ஓஹோ என்றெல்லாம் ரசிக்க முடியவில்லை.
இன்று மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் PS-1 திரைப்படத்தைப் பார்க்கும் பொழுது ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
நாம் Promo-வில் பார்த்து வியந்த காட்சிகள், வசனங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கிறது. தொய்வின்றி வெகு வேகமாக நகரும் திரைப்படம் ஒரு Extended Promo-வைப் பார்ப்பது போலத்தான் இருந்தது. கேமராவும் அங்கும் இங்கும் அலை பாய்ந்து நம்மையும் அந்த ஓட்டத்தில் இணைக்கிறது.
அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் சொல்லப்போனால் அவர்களின் உடை, ஒப்பனை, பின்னணி இசை, படமாக்கப்பட்ட இடங்கள் (Set) என்று அவர்களை அந்தந்த கதாபாத்திரத்தில் அமர வைத்து விடுகிறார்கள்.
மணிரத்தினம் படங்களில் வழக்கமாக வரும் ரகசிய வசனங்கள் இல்லை எனினும் யாரும் பக்கம் பக்கமாக எல்லாம் வசனம் பேசவில்லை அதே போல் தூய தமிழில் ராஜா காலத்து பாணி என்றெல்லாம் செயற்கையாக ஏதும் செய்யாமல் வழக்கமான தொணியியிலே ராஜ வசனங்களைப் பேசி இருப்பது சிறப்பு.
பாடல்களும் பின்னணி இசையும் படத்துடன் ஒன்றி Teaser-ல் பார்த்ததை விட பொருத்தமாகவே இருந்தது. கேமரா ஆங்கிள்கள், லைட்டிங்ஸ் பிரம்மாண்டத்தின் உச்சம்.
Set எது Real எது என்று தெரியாத அளவிற்கு அருமையாக இருந்தது ஆர்ட். பாகுபலியை எதிர்பார்த்து செல்ல வேண்டாம்.
ஜெயமோகனின் வசனம் படத்திற்கு உயிரோட்டம் அவரின் எழுத்துக்களை (வெண் முரசு நாவல்களை) படித்தவர்களுக்கு கூடுதல் சிலிர்ப்பைத் தரும் என்பது உறுதி.
அமரர் கல்கியின் நாவலை படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று அனைவரும் படம் சூப்பர் என்று சொல்வதையும் eager to see Part 2 என்று பேசிக்கொள்வதையும் திரையரங்கில் கேட்க முடிந்தது.
அனைவரும் குடும்பத்துடன் பார்த்து உணர வேண்டிய திரைப்படம் பொன்னியின் செல்வன் - 1.
பின்குறிப்பு : எந்த வித விமர்சனங்களையும் பார்க்காமல் கேட்காமல் திரைப்படத்தைப் பார்ப்பதும் ஒரு தனி வித அனுபவம் தான்!!!
Mind Voice : நடிக நடிகையர் Online Shopping-ல் பார்த்து சலித்த ஆபரணங்களை அணிந்து வந்தது பெருத்த ஏமாற்றமே 😏
Comments
Post a Comment