Gulmohar (Hindi)

சமீபமாக நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் Hot Star-ல் பார்த்த குடும்பச் சித்திரம் "Gulmohar".

தனது மகன் ( Manoj Bajpayee) மருமகள் (Simran) பேரன் பேத்திகள் சகிதம் வசதியான மாளிகையில் வாழ்ந்து வரும் பாட்டி (Sharmila Tagore) சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வாழ்ந்து வந்த வீட்டை விற்று விடுகிறார். அனைவரும் வெல்வேறு இடங்களுக்கு செல்லவிருக்கும் நிலையில் திரைப்படத்தை தொடங்குகிறார் இயக்குனர்.

ஒற்றுமையாக இருந்த குடும்பம் பிரிய வேண்டிய நிலை வந்து விட்டதே என்று மகன் மிகவும் வருந்துகிறார் ஆனால் 30+ வருடங்களாக ஒரே வீட்டில் இருந்தும் அவர்கள் எவ்வாறு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் வாழ்ந்தனர் என்பதை பல்வேறு நிகழ்வுகள், Flash back மூலம் Audience-களான நமக்கு புரியவைத்தபடி கதையை முன் நகர்த்தி திரைப்படத்தை சுபத்தில் முடித்து வைக்கிறார் இயக்குனர் Rahul. V. Chittella.




கதை என்று பெரிதாக ஒன்றுமில்லை. படத்தை இன்றைய காலகட்டத்தோடு ஓட்ட வைக்க பேரனின் App Start-Up, பேத்தியின் காதல் வாழ்கை மற்றும் பாட்டியின் கடந்த காலத்தில் ஏற்பட்ட உணர்வு மாற்றங்கள், குடும்பமாக விழாவில் மது அருந்துதல்  போன்ற யுக்திகளை  பயன் படுத்தி இருந்தாலும் ஏனோ பழைய தூர்தர்ஷன் காலத்து படத்தை பார்த்தது போன்ற உணர்வே மேலோங்கி இருந்தது. குறிப்பாக சித்தப்பாவாக வரும் "Amol Palaker"-ன் Characterization. 

 இந்த 'Batra" குடும்பத்து சுக துக்கங்களோடு நம்மால் கலக்க முடியாமல் பார்வையாளராக மட்டுமே இருக்க நேரிடுவதால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

சண்டைக் காட்சிகள் இல்லை. வன்முறை இல்லை. அடுத்து என்ன நேருமோ என்று பரபரப்பாக யூகிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய ரத்த அழுத்ததை எகிறச செய்யும் இரைச்சல் நிறைந்த பாடல்கள் இல்லை. இதயத்துடிப்பை அதிகரிக்கும்' எமோஷனல் நாடகங்கள் இல்லை ஆனால் படத்தில் பல நல்ல வசனங்கள் உண்டு குறிப்பாக Manoj Bajpayee டீ கடைக்காரரை சந்தித்து பேசும் காட்சி.

குழந்தைகளோடு பார்க்கலாமா? அவர்களுக்கு பொறுமை இருக்காது!!!

மேற்சொன்னவற்றை கேட்கும் பொழுது பார்க்கலாம் என்று தோன்றினால் நிச்சயமாக ஒரு சனிக்கிழமை மதியத்தை ஒதுக்கலாம் 😃


Comments

Popular posts from this blog

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - Montreal #roadtrip #travel_blog