Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

2020-ம் ஆண்டு மார்ச் மாதம் உலகெங்கும்  கரோனாவின் தீவிரம் பரவத் தொடங்கி கிட்டத்தட்ட அனைவருமே வீட்டில் முடங்க வேண்டிய சூழல் நிலவியது. குறைந்த பட்சம் அடுத்த ஆறு மாதத்திற்காவது இது தொடரும் என்ற நிலை வந்த பொழுது நம்மில் பலரும் பல புதிய பழக்க வழக்கங்களை கடை பிடிக்கத் துவங்கினோம். அதில் பாரபட்சமின்றி உலக மக்கள் அனைவராலும் பின்பற்றப்பட்ட ஒன்று OTT-ல் படம் பார்ப்பது.

நானும் அதற்கு முன் Streaming Service -களில்  படம் பார்த்தவள் தான் என்றாலும் இந்த அசாதாரணமான Quarantine காலகட்டத்தில் அதன் எண்ணிக்கை பன்  மடங்காக பெருகியதோடு மட்டுமல்லாமல் அதன் எல்லையும் தமிழ் படங்களைக் கடந்து விஸ்தாரமாக விரியத் துவங்கியது எனலாம்.

இந்த OTT வசதியை மிகவும் லாவகமாக பயன்படுத்திக் கொண்ட பட உலகம் என்றால் அது 'Molly Wood" என்று அழைக்கப்படும் மலையாள பட உலகம் தான். அதிக பொருட் செலவில்லாமல் குறைந்த தினங்களில் படங்களை முடிக்கும் மலையாள இயக்குனர்கள் இந்த புதிய வாய்ப்பை இனம் கண்டு  வாரம் தவறாமல் அனைத்து OTT தளங்களிலும் தரமான மலையாளப் படங்கள் வந்த வண்ணம் இருக்கும் படி பார்த்துக் கொண்டனர். இன்றும் அது தொடர்கிறது.

அவ்வாறு மலையாளப் படங்களில் மயங்கிய எனக்கு அறிமுகமான நடிகர் தான் "சௌபின் ஷாஹிர்"

"Android Kunchappan " என்ற படத்தில் முதல் முதலாக சௌபினை பார்த்த எனக்கு "யாரு இந்த நடிகர்?" மிகவும் சாதாரணமாக இருக்கிறாரே? என்று தோன்றியது எனினும் அதில் அவருக்கு Supporting character தான் என்பதால் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.

அடுத்ததாக "Sudani from Nigeria" என்ற Emotional Drama-வை பார்க்க நேர்ந்தது. நடிப்பதே தெரியாமல் நடிக்கும் அவரின் திறமையைக் கண்டு அசந்து விட்டேன்.

ஒரு நடிகருக்கான குறிப்பாக கதாநாயகனுக்கான எந்த இலக்கணமும் இல்லாமல் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் யார் என்று Google செய்து பார்த்ததில் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றி ஓரிரு படங்களையும் இயக்கியவர் என்றும் பல்வேறு படங்களில் சிறு சிறு கேரக்டரில் வந்துள்ளார் என்றும்  தெரிய வந்தது.

நண்பர்களிடம் சௌபினைப் பற்றி சிலாகித்து பேசிக் கொண்டிருக்கையில் கேரளத்து நண்பர் ஒருவர் " Ambili" என்ற படத்தை பார்க்குமாறு பரிந்துரைத்தார்.

இதுவரை நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு நபரை நினைவுறுத்தும் விதமான ரோல்களில் பார்த்துக் கொண்டிருந்த சௌபினை அம்பிலியில் புது விதமாக பார்க்க முடிந்தது. Very Natural Actor என்று கைத்தட்டத் தோன்றியது.

அதற்குப் பின் "Kumbalangi Nights" "Vikruthi" என்று வரிசையாக அவர் நடித்த படங்களை பார்த்து ரசித்தேன். 




தன்னுடைய வழக்கமான பாணியில் இருந்து சற்று விலகி  Fahadh  Faasil உடன் இணைந்து "இருள்" என்ற Mystery Thriller- ல் நடித்திருந்தார்.

"Bro daddy" என்ற படத்தில் Event organizer கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகராக சில நிமிடங்கள் வந்து சென்றார்.

மிக சமீபத்தில் Soubin நடித்த  "Romancham" என்ற "Horror-Comedy" படத்தை Hot Star-ல் பார்த்தேன். Amazing Screenplay. இவருக்காகவே எழுதப்பட்ட கதாபாத்திரம் என்பது போல கன கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

Soubin-னிடம் அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைக்கும் உயரம் இல்லை. பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் Six-pack - கோ  Stylish Walk-கோ இல்லை. கன்னியரை கவர்ந்திழுக்கும் Charming Look இல்லை. Dance ஆட வராது.  இவ்வளவு ஏன் நொடிக்கொருதரம் கலைத்து விட்டுக்கொள்ள தலையில் முடி கூட இல்லை இருந்தும் இரண்டரை மணி நேரம் இவரை ரசிக்க முடிகிறதென்றால் இவரை கதை நாயகன் என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது?!

"இதெல்லாம் மலையாள பட உலகில் சாதாரணமப்பா" என்கிறீர்களா?!

நீங்களும் இவரின் படங்களை ரசித்து பார்த்திருக்கிறீர்கள் என்றால் கமெண்டில் பதிவிடுங்கள் இல்லையென்றால் நான் மேலே குறிப்பிட்ட படங்களை நேரம் கிடைக்கும் பொழுது கண்டு மகிழுங்கள்.

பின் குறிப்பு - "Premam"  படத்தில் P.E டீச்சராக வந்து நம்மை சிரிக்க வைத்தவரும் Soubin Shahir தான் !!!

Comments

Popular posts from this blog

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

மகாராஜா