இறுகப்பற்று
இயக்குனர் யுவராஜ் தயாளனின் நான்காவது படைப்பு ஆனால் முதல் வெற்றிப் படம் "இறுகப்பற்று".
Netflix-ல் ரிலீஸ் ஆனது முதல் பலர் என்னிடம் "படம் பாத்தாச்சா?" "எப்போ Review போடுவீங்க?" என்று மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். இதோ உங்களுக்காக எனது எண்ணங்களை பதிவிடுகிறேன்.
படத்தில் மூன்று தம்பதியர்கள் வருகிறார்கள். அவர்களின் மண வாழ்க்கையில் பிரச்சனைகள் முளைக்கிறது அவர்களைத்தவிர மற்றவர்களுக்கு ஏன் படம் பார்க்கும் நமக்கும் கூட "இதெல்லாம் பெரிய problem-ஆ" என்று எண்ணத் தோன்றுகிறது இருந்தாலும் இச்சிறிய பிரச்சனைகள் எவ்வாறு பூதாகரமாக மாறும், இதற்கு மூல காரணங்கள் என்னென்ன என்று " Marriage Councilor" ஆக வரும் சிரத்தா-வின் மூலம் இயக்குனர் சொல்லி இருக்கும் விளக்கங்கள் அற்புதம்.
"Live Commentary" கொடுத்துக் கொண்டே படம் பார்க்கும் என்னை போன்றவர்களையும் நச் வசனங்கள் மூலம் அங்கங்கே வாயை மூட வைத்து விடுகிறார் இயக்குனர்.
படம் முழுக்க அழுது கொண்டே இருக்கும் திவ்யாவை பார்க்க உங்களுக்கு கோபம் வந்ததா?, மனைவியைத் திட்டும் விதார்த்தை பார்க்க எரிச்சல் வந்ததா? அமைதி அமைதி என்று வாழும் ஷ்ரத்தா-வைப் பார்த்து திட்டத் தோன்றியதா? இதுவே படத்திற்கும் இயக்குனருக்கும் கிடைத்த வெற்றி. நடிகர்களுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம்.
இத்திரைப்படம் ஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு "Emotion"ஐ கொடுக்கும். நடுத்தர வயதினளான எனக்கு என் வாழ்வை நன்றியுடன் திரும்பிப் பார்க்க ஓர் வாய்ப்பு கிடைத்தது.
Abusive Relationship-ல் இருந்து கொண்டு அவதிப்படுபவர்களை அதிலிருந்து வெளிவர கற்றுக் கொடுக்கும் இன்றைய திரைப்படங்களுக்கு மத்தியில் பிரச்சனைகளை சந்திக்கும் திருமணங்கள் எல்லாமே மோசமானவையும் அல்ல..பிரச்சனைகளே இல்லாமல் செல்லும் திருமணங்கள் சிறந்தவைகளும் அல்ல என்றும் தங்களுக்கு வரும் பிரச்சனைகளை Solve செய்ய முயற்சிக்கும் தம்பதிகளை காட்டி இளைய தலைமுறையினரிடையே நம்பிக்கையை விதைத்திருக்கிறார் இயக்குனர்.
மிக மெதுவாக செல்லும் திரைக்கதை சிலருக்கு சோர்வைத் தரலாம் எனினும் கட்டாயம் பார்க்க முயற்சிக்கலாம்.
பின் குறிப்பு - உங்கள் வாழ்க்கைத்துணையுடன் இணைந்து இப்படத்தை பார்க்க நேர்ந்தால் வாயை மூடிக் கொண்டு பார்க்கவும். உங்கள் வாழ்க்கையை படத்தோடு அங்கங்கே compare செய்து கொண்டு வாக்குவாதத்தில் இறங்கினால் (Rubber Band பிய்ந்தால்) நிர்வாகம் பொறுப்பேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் 😜
Comments
Post a Comment