Manjummel Boys - Malayalam

பட்டி தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பி விட்டு கடைசியாக இன்னும் படம் பார்க்காமல் காத்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்காக ஹாட்ஸ்டார் தளத்தில் வந்திருக்கிறது  'Manjummel Boys"!!! 

படம் வெளிவந்து சில மாதங்கள் ஆகிவிட்டதாலும், வெற்றிப் படம் என்ற அந்தஸ்தைப் படம் பெற்று விட்டதாலும், படத்தின் கதை படம் பார்ப்பதற்கு முன்னே நமக்கு தெரிந்துவிட்டதாலும் விமர்சனம் என்று எதுவும் சொல்வதற்கு இல்லை அப்படியே எழுதினாலும் அவை நான் கேட்டு பார்த்த சமூக வலைதள கருத்துக்களால் பாதிக்கப்பட்டதாகவே (Biased) இருக்கும் என்பதால் என்னைக் கவர்ந்த காட்சிகளையும் கதை நகர்வை மட்டுமே உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

கேரளாவின் Manjummel என்ற கிராமத்தில் இருந்து கொடைக்கானல் செல்லும் இளைஞர்கள் குழு என்னென்ன ஆட்டம் போட முடியுமோ அத்தனையும் ஒன்று விடாமல்  செய்து விட்டு முடிவில் குணா குகைக்கு செல்ல  அங்கிருக்கும் குழியில் அவர்களில் ஒருவன் தவறி விழுகிறான் பின் நண்பனால் காப்பாற்றப் படுகிறான்.இந்த ONE Liner-யை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வாறு இரண்டு மணி நேர படத்தை  எடுத்திருப்பார்கள்  என்ற ஆர்வமே என்னில் மேலோங்கி இருந்தது.




வழக்கமான காட்சிகளான போலீசை அழைக்கச் செல்வது பதறி கதறி அழுவது ஒரு கட்டத்திற்கு மேல் எதுவும் செய்வதற்கு இல்லை என்று அவ்விடத்தை விட்டு கிளம்ப எத்தனிப்பது என்பது போன்ற காட்சிகள்  வந்தாலும் இடையிடையே அவ்விளைஞர்கள் சிறுவர்களாக இருந்த போது நடந்த Traumatic Scene களை காட்டுவது ரசிக்கும் படியும் ஹாலிவுட் படங்களை நினைவுறுத்தும் விதமாக இருந்தது. சுபாஷ் குழியில் விழும் அக்கணம் ஒரு திடுக்கிடலைத் தரும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

இளைஞர்கள் குழுவிற்கிடையே கயிறு இழுக்கும் போட்டியை ஏன் இயக்குனர் முதலில் மையப்படுத்துகிறார் என்பது போகப்போக நமக்கு புரிகிறது அதை கதைக்குள் கொண்டு வரும் விதமும், Abhilash என்ற கதாபாத்திரம் பிரம்மை பிடித்தது போன்று செயல்பட்டாலும் கடைசியில் வந்து உதவுவது எல்லாம் ரசிக்கும் படி இருந்தது.

உண்மை சம்பவத்தை அடிப்டையாகக் கொண்டு வெளி வந்திருக்கும் இப் படத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் குணா பாடலை உபயோகித்திருக்கும் விதத்தைப் பற்றி சிலாகித்து கூறியது போன்ற Goosebump moments எல்லாம் எனக்கு தோன்றவில்லை அதனாலேயே இப்படத்தை Classic Movies List -ல் சேர்க்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் படத்தை ஒருமுறை என்ன 2-3 தடவை கூட கண்டிப்பாகப் பார்க்கலாம், Bore அடிக்காது!

சுபாஷ் பாறையில் விழுந்து கிடக்கும் நிலையைப் பார்த்தால் அவருக்கு Multiple Fractures இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது ஆனால் அவர் சாதாரணமாக காரில் அமர்ந்து கேரளா திரும்புவது அதிர்சியைக் கொடுக்கிறது.

குட்டனாக வரும் Shoubin சுபாஷ் ஆக வரும் ஸ்ரீநாத்  இதை விட அருமையான படங்களில் எல்லாம் நடித்திருக்கிறார்கள்  அதனால் அவரிகளின் நடிப்பைப் பற்றிக் கூற பெரிதாக ஒன்றும் இல்லை.

இப்படத்தைக் குறித்த உங்களின் அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்!!!

Comments

Post a Comment

Popular posts from this blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

மகாராஜா