Posts

Showing posts from October, 2024

மெய்யழகன்

C.பிரேம் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி, கார்த்தி மற்றும் பல அபிமான நட்சத்திரங்களின் நடிப்பில் செப்டம்பர் மாதம் திரைக்கு வந்து வெற்றி நடை போடுவதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் "மெய்யழகன்". படம் பார்த்த ஒரு சாரார் " மூணு மணி நேரம் சொன்னதையே சொல்லி கழுத்தறுத்துட்டாங்க", "Whatsapp forward மாதிரி இருந்துச்சு", "இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் எங்க இருக்குறாங்க?",  "Emotions - ஐ காட்றேன் என்று ரொம்ப ட்ராமா பண்ணிட்டாங்க" போன்ற விமர்சனங்களை முன் வைக்க... மறு சாரார் "குடும்பத்தோட உட்கார்ந்து பாக்குற மாதிரி தரமான படத்தை எடுத்திருக்காங்க", "பல இடங்கள்ல அழ வச்சுட்டாங்க", "எல்லாரும் அருமையா நடிச்சிருக்காங்க" போன்ற நேர்மறை விமர்சனங்களை முன் வைக்க..Netflix-ல் வெளிவந்த இப்படத்தை பார்த்த என் கருத்து இந்த இரு சாரரோடும் ஒத்துப் போனது!!! என்னைப் பொறுத்தவரை "மெய்யழகன்" திரைப்படத்தை  ஒரு புத்தகம் வாசிக்கும் அனுபவத்தோடு மட்டுமே ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தன்னுடைய Inner emotion - களுடன் தொடர்பற்ற ஒருவனாக தன்னை வெளிக்காட்டிக் ...

வாழை

Image
"வாழையடி வாழையாய் வாழ்வாங்கு வாழ்க" "வாழை குலை தள்ளுவது போல உங்கள் குலம் தழைக்கும்" என்று வாழையை நல் வாழ்விற்கு ஆதாரமாய் மட்டுமே  பார்த்துப்  பேசிப் பழகிய நமக்கு வாழையையே தங்களின் வாழ்வாதாரமாக நம்பும் மக்களின் பசி, ஏமாற்றம், கனவு, காதல் மற்றும் சோகம்  கலந்த வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக  நமக்கு படம் பிடித்துக் காட்ட முயன்று வென்றிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்!!! உண்மைச் சம்பவத்தை கதைக் கருவாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் சிவனைந்தன் என்னும் 13 வயது இளைஞன். அவனை ஒட்டி நகரும் கதை அவன் மிக விரும்பும் பள்ளி வாழ்க்கையையும், விடுமுறை நாட்களில் அவன் செய்யும்  (சற்றும் பிடிக்காத)  காய் சுமக்கும் வேலையையும் சுற்றி நகர்கிறது. பூங்கொடி டீச்சர் மேல் அவனுக்கு ஏற்படும் ஈர்ப்பை இயக்குனர் அடிக்கடி  கோடிட்டு காட்டுவது சற்று களைப்பை தந்தாலும் நடுநடுவே அம்மா மற்றும் அக்காவுடனான எமோஷனல் காட்சிகளை Subtle ஆக காமித்து கண்களில் கண்ணீர் வரவைக்கிறார். தங்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள் என்று தெரிந்தும் தான் வாங்கிய முன் பணத்திற்காக  உ...

பரியேறும் பெருமாள்

இயக்குனர் மாரி செல்வராஜின் முதல் படைப்பான  "பரியேறும் பெருமாள்" இயக்குனர் ரஞ்சித்தின் தயாரிப்பில் , சந்தோஷ் நாராயணனின் இசையில் வெளிவந்திருக்கிறது. படத்தின் தலைப்பையும், போஸ்டர், டீஸர் ஆகிவற்றை பார்க்கும் போதும் படத்தின் மூலக்கதையை நம்மால்  ஓரளவு யூகிக்கிக்க முடிகிறது...நம் யூகமும் ஓரளவிற்கு சரியாகவே இருப்பினும் நம்மால் நினைத்தும் பார்க்கமுடியாத சிறு சிறு நுணுக்கங்களை திரைக்கதையில் புகுத்தி படத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்கிறார் அறிமுக இயக்குனர். படம் தொடங்கியதும் வரும் "கருப்பி " பாடல் மேற்கத்திய "Rap" ஸ்டைலில் எழுதி பாடியிருக்கிறார்கள். கேட்டதும் "என்ன பாட்டு இது " என்று தோன்றினாலும் பாடல் முடியும் பொழுது "நல்லா இருக்கே " என்று எண்ண வைக்கிறது. பின்தங்கிய மக்கள் வாழும் கிராமத்தில் இருந்து சட்டக்கல்லூரியில் படிக்க வரும் மாணவனாக கதிர் கனகச்சிதம். "பரியேறும் பெருமாள் " கதாபாத்திரத்தின் மேல் அனாயசமாக  ஏறி  சிம்மாசனம் போட்டு அமருகிறார் (நம் மனதிலும் கூட !!!). கோபம், சிரிப்பு, சோகம், பயம், ஏமாற்றம், அதிர்ச்சி  என்று அனை...

Making Of GOAT - Movie Review

Image
முன்னணி ஹீரோக்களின் படம் வருகிறதென்றாலே ஒரு எதிர்பார்ப்பு அனைவரையும் தொற்றிக்கொள்கிறது. படம் சூப்பராக இருக்க வேண்டும் என்று ரசிகர்களும், குறைந்தபட்சம் பார்க்கும் படியாவது  இருக்க வேண்டும் என்று  மற்றவர்களும் எதிர்பார்க்கிறார்கள் மொத்தத்தில் எதிர்பார்ப்பு இருப்பது உண்மை தான். "இளைய தளபதி அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டார் அவரின் கடைசி படத்திற்கு முந்தைய படம் என்பதால் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும்  (அவர் இதுவரை நடித்த படங்களை எல்லாம் ரசிகர்களுக்கு நினைவு படுத்த வேண்டும்) " என்று நடிகருக்கு நெருங்கியவர்கள் முடிவெடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவை அணுகி இருப்பார்கள் போல அதனுடைய விளைவு 👇👇👇 படத்திற்கு நல்ல செலவு  செஞ்சு Hollywood படம் மாதிரி இருக்கனும் - கூப்பிட்றா AI Team-அ!! அப்பா. மகன், ஹீரோ, வில்லன்-ன்னு படம் முழுக்க இளைய தளபதி தான் வரணும் ஆனால் அவரே வர்றாருன்னு Fans பீல் பண்ணக்கூடாது  - No Worries அதான் AI இருக்கே !! இளைய தளபதிக்கான ஓட்டு வங்கி எங்கு உள்ளது?! இப்போது 35-45 வயது வரம்பில் இருக்கும் அவரின் வசீகரா, கில்லி போன்று 2000-ம் ஆண்டின் தொடக்கங்களில் வெள...