Making Of GOAT - Movie Review

முன்னணி ஹீரோக்களின் படம் வருகிறதென்றாலே ஒரு எதிர்பார்ப்பு அனைவரையும் தொற்றிக்கொள்கிறது. படம் சூப்பராக இருக்க வேண்டும் என்று ரசிகர்களும், குறைந்தபட்சம் பார்க்கும் படியாவது  இருக்க வேண்டும் என்று  மற்றவர்களும் எதிர்பார்க்கிறார்கள் மொத்தத்தில் எதிர்பார்ப்பு இருப்பது உண்மை தான்.

"இளைய தளபதி அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டார் அவரின் கடைசி படத்திற்கு முந்தைய படம் என்பதால் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும்  (அவர் இதுவரை நடித்த படங்களை எல்லாம் ரசிகர்களுக்கு நினைவு படுத்த வேண்டும்) " என்று நடிகருக்கு நெருங்கியவர்கள் முடிவெடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவை அணுகி இருப்பார்கள் போல அதனுடைய விளைவு 👇👇👇

படத்திற்கு நல்ல செலவு  செஞ்சு Hollywood படம் மாதிரி இருக்கனும் - கூப்பிட்றா AI Team-அ!!

அப்பா. மகன், ஹீரோ, வில்லன்-ன்னு படம் முழுக்க இளைய தளபதி தான் வரணும் ஆனால் அவரே வர்றாருன்னு Fans பீல் பண்ணக்கூடாது  - No Worries அதான் AI இருக்கே !!

இளைய தளபதிக்கான ஓட்டு வங்கி எங்கு உள்ளது?! இப்போது 35-45 வயது வரம்பில் இருக்கும் அவரின் வசீகரா, கில்லி போன்று 2000-ம் ஆண்டின் தொடக்கங்களில் வெளிவந்த படங்களை ரசித்தவர்களிடம்  - போட்றா சினேகாவையும் திரிஷாவையும்!! (Laila in the Cameo)

Bollywood படங்களில் எல்லாம் Multi Heroes வருகிறார்கள்  - அதனால என்ன போட்ரலாம் (பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல்)

இப்போ Trending-ல இருக்குற ஹீரோ Guest Appearance பண்ணா நல்லா இருக்கும் - அட நம்ம சிவகார்த்திகேயன் இருக்காறே!!




ஒரு ட்விஸ்ட் வேணுமே? - கூட வர்ற Friend ஒருத்தற துரோகி ஆக்கிரலாம்.

திரில் வேணுமே? - நம்ம இளையதளபதி 3 கொலை பண்றாரு போதுமா?! 

வில்லனா இருந்தாலும் இளைய தளபதி சாகக்கூடாது - கிளைமாக்ஸ் எப்பிடி Mass-ஆ  வைக்கிறேன்னு மட்டும் பாருங்க!! 😀

என்னோட படங்கள்ல வழக்கமா வர்ற பிரேம்ஜி, வைபவ், YG, அரவிந்த் ஆகாஷ், VTV கணேஷ், ஜெயராம்  இவங்கள போட்டுக்கலாம்ல..அப்பிடியே யுவன் Music  - போட்டுக்குங்க டைரக்டர் சார்!!

யுவன் "அனிருத் Music-ல இருந்து நம்ம ரசிகர்களை காப்பாத்துறோம் ஆனா இன்றைய தலைமுறைக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும் - Audience Mind Voice - பாட்டெல்லாம் அனிருத் போட்ட மாதிரியே இருக்கே 😂😂

வேறேதாவது இருந்தா சொல்லுங்க அதையும் சேத்துரலாம்!!

எல்லாம் சரியா இருக்கு ஆனா ஏதோ குறையுற மாதிரி இருக்கே?! - மைக் மோகன வில்லனா அறிமுகப்படுத்திரலாம் விடுங்க Promo-வுக்கு Useful-ஆ இருப்பாரு!!

எல்லாம் சரி கதை?! - அதப் பத்தி நீங்க ஏன் கவலை பற்றீங்க?!

Logic?! - அதை என் படத்துல ரசிகர்கள் எதிர் பாக்கவே மாட்டாங்க..கவலைய விடுங்க!!

-----------

இனிமே GOAT படம் நல்லா இல்லன்னு யார்ட்டயாச்சும் சொல்லுவீங்க?!

"உன்னை சொல்லி குற்றம் இல்லை..என்னை சொல்லி குற்றம் இல்லை..காலம் செய்த கோலம் இது...சினிமா ரசிகர்கள் செய்த பாவம் இது" 😝 

பின் குறிப்பு - எல்லாம் OK ஆனா Vaibhav-ஐ Youth-ஆ காமிச்சதுதான் தாங்க முடியவில்லை 😤

Comments

Popular posts from this blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

மகாராஜா