வாழை

"வாழையடி வாழையாய் வாழ்வாங்கு வாழ்க" "வாழை குலை தள்ளுவது போல உங்கள் குலம் தழைக்கும்" என்று வாழையை நல் வாழ்விற்கு ஆதாரமாய் மட்டுமே  பார்த்துப்  பேசிப் பழகிய நமக்கு வாழையையே தங்களின் வாழ்வாதாரமாக நம்பும் மக்களின் பசி, ஏமாற்றம், கனவு, காதல் மற்றும் சோகம்  கலந்த வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக  நமக்கு படம் பிடித்துக் காட்ட முயன்று வென்றிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்!!!

உண்மைச் சம்பவத்தை கதைக் கருவாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் சிவனைந்தன் என்னும் 13 வயது இளைஞன். அவனை ஒட்டி நகரும் கதை அவன் மிக விரும்பும் பள்ளி வாழ்க்கையையும், விடுமுறை நாட்களில் அவன் செய்யும்  (சற்றும் பிடிக்காத)  காய் சுமக்கும் வேலையையும் சுற்றி நகர்கிறது.




பூங்கொடி டீச்சர் மேல் அவனுக்கு ஏற்படும் ஈர்ப்பை இயக்குனர் அடிக்கடி  கோடிட்டு காட்டுவது சற்று களைப்பை தந்தாலும் நடுநடுவே அம்மா மற்றும் அக்காவுடனான எமோஷனல் காட்சிகளை Subtle ஆக காமித்து கண்களில் கண்ணீர் வரவைக்கிறார்.

தங்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள் என்று தெரிந்தும் தான் வாங்கிய முன் பணத்திற்காக  உழைக்க வேண்டும் என்று போராடும் சிவனைந்தனின் தாய் கதாபாத்திரம் மிகவும் நேர்மையாக எழுதப்பட்டிருக்கிறது அதில் நடித்திருக்கும் நடிகை ஜானகி நம்மை கலங்கடிக்க வைக்கிறார்.

கனி கதாபாத்திரத்தில் கச்சிதமாக வந்து அமர்கிறார் கலையரசன்!!

சேகர் ஆக வரும் சிறுவன் படத்திற்கு மற்றுமொரு தூண்!!!

கதை, நடிகர்கள், பின்னணி இசை என்று திரைப்படத்தை தூக்கி நிறுத்தும் காரணிகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் மற்றொன்று அங்கங்கே வைக்கப்பட்டிருக்கும் Frame-கள் உதாரணமாக கொக்கு பார்ப்பது போன்ற காட்சிகள், சிவனைந்தன் "Baa Baa" என்று மாட்டை தேடி கனவிலும் நனவிலும் ஓடுவது, சுட்டெரிக்கும் சூரியன், கை கால்களில் ஊரும் ரயில் பூச்சி, மஞ்சள் நிற சிலைகள்  மற்றும் அந்த துயர சம்பவத்திற்குப் பின் அவர்களின் முகங்களை ஒவ்வொன்றாகக் காட்டுவது.

அம்பேத்கார் புகைப்படம், கம்யூனிச சின்னம் என்று ஆங்காங்கே பல்வேறு குறியீடுகளை இயக்குனர் காட்டிக்கொண்டே செல்கிறார் நமக்கு ஏதோ கொஞ்சம் விளங்குகிறது.

மொத்தத்தில் இயக்குனரின் முந்தைய திரைப்படங்களைக் காட்டிலும் Light Hearted ஆகவே செல்லும் வாழை இவ்வருடத்தின் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று என்று கூறிக்கொள்கிறார்கள். நீங்களும் பார்த்து விடுங்கள்.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் - இப்பழமொழியின் தீவிரத்தை எனக்கு உணர்த்திய படம் வாழை!!!


மாரி செல்வராஜின் மற்ற படங்களின் விமர்சனத்தைப் படிக்க 👇👇👇

பரியேறும் பெருமாள் - https://nirmalavoice.blogspot.com/2020/05/blog-post.html

கர்ணன்  - https://nirmalavoice.blogspot.com/2021/08/blog-post_30.html

மாமன்னன் -  https://nirmalavoice.blogspot.com/2023/08/blog-post.html




Comments

Popular posts from this blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

மகாராஜா