மெய்யழகன்

C.பிரேம் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி, கார்த்தி மற்றும் பல அபிமான நட்சத்திரங்களின் நடிப்பில் செப்டம்பர் மாதம் திரைக்கு வந்து வெற்றி நடை போடுவதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் "மெய்யழகன்".

படம் பார்த்த ஒரு சாரார் " மூணு மணி நேரம் சொன்னதையே சொல்லி கழுத்தறுத்துட்டாங்க", "Whatsapp forward மாதிரி இருந்துச்சு", "இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் எங்க இருக்குறாங்க?",  "Emotions - ஐ காட்றேன் என்று ரொம்ப ட்ராமா பண்ணிட்டாங்க" போன்ற விமர்சனங்களை முன் வைக்க...

மறு சாரார் "குடும்பத்தோட உட்கார்ந்து பாக்குற மாதிரி தரமான படத்தை எடுத்திருக்காங்க", "பல இடங்கள்ல அழ வச்சுட்டாங்க", "எல்லாரும் அருமையா நடிச்சிருக்காங்க" போன்ற நேர்மறை விமர்சனங்களை முன் வைக்க..Netflix-ல் வெளிவந்த இப்படத்தை பார்த்த என் கருத்து இந்த இரு சாரரோடும் ஒத்துப் போனது!!!

என்னைப் பொறுத்தவரை "மெய்யழகன்" திரைப்படத்தை  ஒரு புத்தகம் வாசிக்கும் அனுபவத்தோடு மட்டுமே ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

தன்னுடைய Inner emotion - களுடன் தொடர்பற்ற ஒருவனாக தன்னை வெளிக்காட்டிக்  கொள்ளும் அரவிந்த்சாமி போன்றவர்களை சுட்டிக் காட்டும்  இயக்குனர்... கார்த்தி போன்ற வெள்ளந்தியான மனிதர்களைக் காண்பதும் அரிதாகி வருகிறது என்பதையும் கோடிட்டு காட்டுகிறார்!!

அரவிந்தசாமியின் முறைப் பெண்ணாக வருபவர் அவரைப் பார்த்த சில நிமிடங்களிலேயே "உன்னையே கல்யாணம் செய்து இருக்கலாம்" என்று கூறுவதிலிருந்து அவரின் மன வேதணையை Subtle ஆக நமக்கு உணர்த்தி விடுகிறார் இயக்குனர்.

நாம் கொலைக்குற்றத்தைக் கூட ஏற்றுக் கொள்வோம் ஆனால் ஒருவரிடம் வேண்டுமென்றே போன் நம்பரை தப்பாகக்  கொடுத்தேன் என்று ஒப்புக் கொள்வோமா?!

இந்த ஒரே கருத்தை படம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளின் மூலம் வலியுறுத்த முயன்ற இயக்குனரின் தைரியத்தை பாராட்டும் அதே வேளையில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் எல்லாம் போலியான பாவனைகளால் தங்களை முன் நிறுத்துபவர்கள்.. கிராமங்களில் வசிப்பவர்கள் அவ்வாறு அல்ல என்று பொதுப்படையாக கூறிவிட முடியாது.

80, 90-களில் வெளிவந்த திரைப்படப்  பாடல்களை பின்னணியில் இசைக்க விடுவது இன்றைய ட்ரெண்ட் அதையும் செய்திருக்கிறார் இயக்குனர்!!

மொத்தத்தில் "மெய்யழகன்" திரைப்படம் - பல வருடங்களுக்கு முன் எழுதிய டைரியை படித்துப் பார்ப்பது போன்ற உணர்வலையை உங்கள் மனதில் உருவாக்கியிருந்தால்  படம் உங்களுக்குப் பிடித்திருக்கும்,  உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அது உங்கள் டைரி அல்ல.. உங்களால் emotional ஆக அதில் உங்களை இணைத்துக் கொள்ள முடியவில்லை என்று அர்த்தம்!!

சூர்யா- ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி நடித்திருக்கும் "மெய்யழகன்" குடும்பச் சித்திரமே!!!

பின் குறிப்பு - இதே இயக்குனரின் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் அரவிந்தசாமி இதே கதாபாத்திரத்தில் வந்து போவார்..கவனித்தீர்களா?!


Comments

Popular posts from this blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

மகாராஜா