மெய்யழகன் Vs லப்பர் பந்து
- Get link
- X
- Other Apps
மெய்யழகன் | லப்பர் பந்து |
C.பிரேம் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி, கார்த்தி மற்றும் பல அபிமான நட்சத்திரங்கள் நடிப்பில் செப்டம்பர் மாதம் திரைக்கு வந்து வெற்றி நடை போடுவதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம். | அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் செப்டம்பர் மாதம் திரைக்கு வந்து வெற்றி நடை போட்ட திரைப்படம். |
படத்தின் முழுக் கதையும் இரு ஆண் கதாபாத்திரங்களை சுற்றியே நகர்கிறது | |
இளமைக்காலத்தில் இவ்விரு கதாபாத்திரங்களும் சந்தித்திருப்பதாகவும் மறுபடியும் நிகழ்காலத்தில் சந்திப்பதாகவும் காட்டப்படுகிறது | |
80, 90-களில் வெளிவந்த திரைப்பட பாடல்களை பின்னணியில் இசைக்க விடுவது இன்றைய ட்ரெண்ட்..இரண்டு திரைப்படங்களிலும் இதைக் காணலாம் | |
இரு முக்கிய கதாபாத்திரங்களை இணைக்கும் common factors ஊரும் உறவுகளும் அவைகளின் மேல் அவர்கள் கொண்டிருக்கும் பாசமும் நட்பும் | இரு முக்கிய கதாபாத்திரங்களை இணைக்கும் common factor கிரிக்கெட்டின் மேல் அவர்கள் கொண்டிருக்கும் தீராக்காதல் என்று நமக்குத் தோன்றினாலும் அவர்களின் குடும்பத்தினர் மேல் கொண்டிருக்கும் அன்பே அவர்கள் இருவரையும் இணைகிறது!! |
கதாநாயகி, காமெடி, வில்லன் என்று தனித்தனியாக ட்ராக் எழுதாமல் அனைவரும் கதையோடு ஒன்றி வருகிறார்கள் அதனால் அனைவரும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். | படத்தில் அம்மா, மகள் என்று காட்டப்பட்டாலும் ஸ்வாசிகா, சஞ்சனா இருவருமே கதாநாயகிகளே. பால சரவணன் மற்றும் குழந்தையாக வரும் குடிகார நண்பர் "ஜென்சன் திவாகரின்" Dialogue Delivary-யும் Body Language-ம் சிரிப்பை வரவழைத்தது. |
தேவதர்ஷனி முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார் | |
படத்தில் ரசித்த காட்சி - அரவிந்தசாமியின் முறை பெண்ணாக வருபவர் அவரைப் பார்த்த சில நிமிடங்களிலேயே "உன்னையே கல்யாணம் செய்து இருக்கலாம்" என்று கூறுவதிலிருந்து அவரின் மன வேதனையை Subtle ஆக நமக்கு உணர்த்தி விடுகிறார் இயக்குனர். | படத்தில் ரசித்த காட்சி - பாலசரவணனுக்கும் காளி வெங்கட்டுக்கும் xerox கடையில் நடக்கும் உரையாடல் "நீ அன்பை தம்பி மாதிரி நினைக்குற ஆனா வெங்கடேஷ் உனக்கு தம்பி" |
எந்த கதாபாத்திரமும் தங்களின் Emotional-களை வெளிப்படையாக காண்பிப்பதில்லை, கார்த்தியை தவிர | அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் உணர்வுகளை Loud and Clear ஆக காட்டி விடுகிறார்கள் |
தன்னுடைய Inner emotion - களுடன் தொடர்பற்ற ஒருவனாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் அரவிந்த்சாமி அதிலிருந்து வெளிவந்து தனது ஈகோவை களைந்து கார்த்தியுடன் தனது நட்பை புதுப்பித்துக் கொள்கிறார் | இரு முக்கிய கதாபாத்திரங்களும் தங்களுடைய ஈகோவை விடுவதன் மூலம் தனி பிரச்சனைகளை மட்டுமல்லாது விளையாட்டுக்கு குறுக்கே நிற்கும் சாதி பிரச்சனையும் தீர்க்கிறார்கள் |
என்னைப் பொறுத்தவரை "மெய்யழகன்" திரைப்படத்தை ஒரு புத்தகம் வாசிக்கும் அனுபவத்தோடு மட்டுமே ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பல வருடங்களுக்கு முன் எழுதிய டைரியை படித்துப் பார்ப்பது போன்ற உணர்வலையை உங்கள் மனதில் உருவாக்கியிருந்தால் படம் உங்களுக்குப் பிடித்திருக்கும், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அது உங்கள் டைரி அல்ல.. உங்களால் emotional ஆக இதில் உங்களை இணைத்துக் கொள்ள முடியவில்லை என்று அர்த்தம்!! | கிரிக்கெட்டை முன்னிறுத்தியும் அதனோடு தொடர்புடைய பல்வேறு விஷயங்களில் முக்கியமானதான சாதி வேற்றுமையை பின்னிருத்தியும் Commercial திரைப்படத்திற்கு தேவையான பல்வேறு அம்சங்களை சரிசமமாக கலந்தும் இயக்குநர் தந்திருக்கும் "ரப்பர் பந்து" திரைப்படம் அனைவருக்கும் கட்டாயம் பிடிக்கும் என்று நினைக்கிறேன் |
"நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் எல்லாம் போலியான பாவனைகளால் தங்களை முன் நிறுத்துபவர்கள்.. கிராமங்களில் வசிப்பவர்கள் அவ்வாறு அல்ல" என்ற இந்த ஒரே கருத்தை படம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளின் மூலம் வலியுறுத்த முயன்ற இயக்குனரின் தைரியத்தை பாராட்டும் அதே வேளையில் அவ்வாறு மக்களை Generalize செய்து விடவும் முடியாது அல்லவா!! | கெத்து மனைவி அசோதாவின் சாதியை நமக்கு வலியுறுத்த அத்தனை காட்சிகள் தேவையா?! |
Amazon Prime-ல் காணக்கிடைக்கிறது |
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment