விடாமுயற்சி
"மனிதம் மனம் ஒரு குரங்கு" இந்த வாசகம் தான் எத்தனை உண்மை என்பதை எனக்கு உணர்த்திய திரைப்படம் 'விடாமுயற்சி".
என்ன ஒரே குழப்பமாக உள்ளதா?! விளக்குகிறேன் வாருங்கள் 😀
நமக்கு தான் படத்தோடு சேர்ந்து Live Commentary கொடுப்பது, இதற்கு அடுத்து இதுதானே வரும் என்று யூகிப்பது எல்லாம் கை வந்த கலை ஆச்சே!!! மாஸ் ஹீரோக்களின் படங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.
பொதுவாகவே முன்னணி ( (வயது முதிர்ந்த) கதாநாயகர்களின்படங்களை பார்க்கும் போது நம்மில் எழும் சில எண்ணங்கள் 👇👇👇
1. எதுக்கு இப்பிடி ஹீரோயிச காட்சிகளை Scene By Scene வைக்கணும், Punch Dialogue பேசி கொல்லனும்?! - அஜித் இப்படத்தில் இவை எதையும் 90% கையாளவில்லை
2. வயதிற்கு ஏற்ற வேடத்தில் நடிக்கலாமே?!
3. எதுக்கு Young Heroines கூட நடிக்கணும்?!
4. Lip Sync கூட சரியா செய்ய தெரியாத North Indian Actors ஐ வில்லனா போட்டா ஒரு ஒரிஜினாலிட்டி-ஏ இல்லை!
5. எல்லா Crimes -ம் இந்தியால தான் நடக்கணுமா?!
நம்முடைய Pulse -ஐ நன்கு அறிந்த இயக்குனர் மேற்கூறிய விஷயங்களை கவனமாக தவிர்த்திருந்தார் ஆனால் விடாமுயற்சி படத்தை பார்த்த போது விடாமல் எண்ணில் ஓடிய "Mind Voice" 👇😅
1. "அய்யோ எவ்வளவு நேரம் தான் இவர் அடிவாங்குவார்?!
2. கொஞ்சமாவது அஜீத்துக்கு நல்லா மேக்-அப் போட்ருக்கலாம்.. Young Get-Up AI யா?!
3. அய்யோ திரிஷாவை எல்லா படத்துலயும் போட்டு படுத்துறாங்களே
4. அர்ஜுன் தான் Main வில்லனா ரெஜினா அவருக்கு ஜோடியா ..ஒரு Impact ஏ இல்லையே 😑
5. எதுக்கு வெளிநாட்டை காமிக்கணும் இந்தியாவிலேயே இப்படத்தை எடுத்திருக்கலாமே!
மகிழ் திருமேனி இயக்கத்தில் கையளவே தெரிந்த நடிகர்களும் அங்கங்கே தமிழ் வசனங்களுடனும் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தை மேல் கூறிய எண்ண ஓட்டத்துடன் இன்னும் ஸ்பெஷல் ஆக எதாவது வருமா..வருமா ? என்ற எதிர்பார்ப்புடனேயே பார்த்து முடித்து விட்டேன்.
Netflix -ல் காணக்கிடைக்கும் இப்படம் உங்களை எந்த அளவிற்கு மகிழ்வித்தது? கமெண்டில் சொல்லுங்கள் 🙏🙏
குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்க்கவும்.
பின் குறிப்பு - திரைப்படம் வெற்றி பெற ஸ்டைலை மட்டும் மாற்றி பயனில்லை கதையும் அது நகரும் போக்கும் நம்மை கட்டிப்போடும் விதமாக அமைய வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.
Comments
Post a Comment