Sapta Sagaradaache Ello - Side A&B (Kannada)
திரைப்பட விமர்சணம் எழுதி கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. பல படங்கள் பார்த்தாகிவிட்டது இந்த இடைவெளியில். தன்னுடைடைய மலரும் நினைவுகளின் வழியே கதை சொல்கிறேன் என்று அந்த கலகட்டத்திற்கேற்ற கதையை "இட்லி கடை" என்ற பெயரில் இயக்கி நம் பொறுமையை சோதித்த தனுஷ். முற்போக்கா சிந்திங்க என்று நான் அனைவருக்கும் "Dude" ஆக Advice செய்து விட்டு தான் மட்டும் கதாநாயகியை நினைத்து இதயம் முரளி போல உருகுவேன் என்று ஏமாற்றிய பிரதீப் ரங்கநாதன். முதல் பாகத்தை விட மிரட்டலாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வெளிவந்திருக்கும் காந்தாரா 2.
இன்னும் பலப்பல திரைப்படங்கள். இவற்றுக்குக்கெல்லாம் விமர்சனம் செய்ய வேண்டும் என்று தோன்றாத எனக்கு " Sapta Sagaradaache Ello - Side A&B (Kannada)"- ஐ பார்த்த போது தோன்றியது.
"ஏழுகடல் தாண்டி" என்று அறியப்படும் இப்படத்தை பார்க்குமாறு recommendations பல நாட்களுக்கு முன்பிருந்தே வந்த வண்ணம் இருந்தது என்றாலும் இப்போதுதான் அதற்கு நேரம் வந்தது போலும்.
மனுவும், ப்ரியாவும் காதலர்கள். Lower Middle Class வர்கத்தில் வாழும் தங்களின் வாழ்க்கைத்தரத்தை பிரியாவிற்கு உகந்த வண்ணம் மாற்ற ஆசைப்பட்டு மனு செய்யும் காரியம் அவர்கள் வாழ்கையை எவ்வாறு தலைக்கீழாக மாற்றியது என்பது தான் முதல் பாகத்தின் கதை.
ரக்ஷித் செட்டியும் ருக்மிணி வசந்தும் தங்கள் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். பெரிதாக இருவருக்கும் நடுவே காதல் காட்சிகள் இல்லை இருந்தும் கண்களாலேயே ஸ்கோர் செய்கிறார்கள்.
கதையின் அனைத்து கதாபாத்திரங்களும் கனகச்சிதமாக Cast செய்யப்பட்டுள்ளனர். நமக்கும் கன்னட நடிகர்கள் பரிட்சயம் இல்லை என்பதால் அவர்களைப் பற்றிய ஜுட்ஜ்மெண்ட் இல்லாமல் படம் பார்க்க முடிகிறது.
வழக்கமான பாணியில் தொடங்கிய படம் நம்மை எந்த அளவிற்கு உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறது என்பதை படம் முடியும் போது உணர முடிகிறது.
ருக்மிணி வசந்தின் மேல் நகரும் திரைப்படம் 7ஜி ரெயின்போ காலணியையும் அவரின் நடிப்பு சோனியா அகர்வாலையும் நினைவு படுத்துகிறது.
Side B
பல்வேறு முக்கிய திருப்பங்களோடு முதல் பாகத்தை முடியும் இடத்திலிருந்து ஆரம்பிக்கிறது இரண்டாம் பாகம்.
ரக்ஷித் ஷெட்டி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறுகிறார் இதில். சொல்லப்போனால் முதல் பாகத்தில் அவரது Hairstyle சற்று Fake ஆகவே தோன்றியது.
புது Chapter- ஐ துவங்கும் அவர் வாழ்வில் விலை மாது சுரபி நுழைந்து காதலியின் இடத்தை பிடிக்க முயற்சிக்கிறார். அவ்வாறு நடந்ததா?! ருக்மிணி என்ன ஆனார்?! இவர்கள் கண்ட கனவு என்ன ஆனது?! போன்ற கேள்விகளுக்கு வெகு சுவாரசியமான திரைக்கதையோடு பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹேமந்த் ராவ்.
மிக மெதுவாக நகரும் கதையில் எதிர்பாரா திருப்பங்கள் வந்த வண்ணமே இருந்தன. ரயில் பெட்டி, ஜன்னல், Vent துவாரம் என்று ஹீரோவின் முகம் காட்டப்படுவது அடைபட்டிருக்கும் அவரது மனநிலையை காட்டுகிறதா?!
பல்வேறு லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ஏதோ ஒன்று நம்மை இப்படத்தை ரசிக்க வைக்கிறது. பாடல்களும் பின்னணி இசையும் இனிமை.
ஒருவனை நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாற்றுவதும் அவன் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கும் காரணம் சூழலே என்பதை இயக்குனர் மெசேஜ் ஆக சொல்லி இருக்கிறார் என்று நான் நினைத்துக் கொள்கிறேன்.
படத்தின் கதையை reveal செய்யாமல் இதற்கு மேல் என்னால் விமர்சிக்க முடியாததால் இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.
நீங்கள் இதுவரை படம் பார்க்கவில்லை என்றால் Google செய்யாமல் Amazon Prime-ல் பாருங்கள். பிடித்ததா என்று comment செய்யுங்கள் 😀
அதீத வன்முறை காட்சிகள் உள்ளதால் இது குழந்தைகளுக்கான (Some Adults too) படம் அல்ல.
பின் குறிப்பு : இதற்கு முன்பே ருக்மிணி வசந்த் நடித்திருக்கும் பல்வேறு படங்களை பார்த்திருக்கிறேன் இப்போதுதான் புரிகிறது அவர் நன்றாகவே Type Cast செய்யப்பட்டிருக்கிறார் என்று 😔


Comments
Post a Comment