Posts

பாவக் கதைகள் - பார்க்கலாமா?

Image
பொதுவாகவே வன்முறைக் காட்சிகள், எமோஷனல் காட்சிகளால் நிரப்பப்பட்டிருக்கும் திரைப்படங்கள், Psychological திரில்லர் என்று சொல்லக்கூடிய மர்மப் படங்கள் குறிப்பாக குழந்தைகளை கடத்தி வைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களை சமீபகாலமாக நாங்கள் தவிர்த்து விடுவதுண்டு. மேற்கூறிய காரணங்களுக்காகவே நான் பார்க்காமல் Choice-ல் விட்ட  திரைப்படங்களில் ஒன்று 2020 டிசம்பரில் வெளிவந்த "பாவக் கதைகள்".  "நான்கு குறும்படங்களில் ஒன்று கூட நம் ரசனைக்கு ஒத்து வராது போலவே? " என்று ட்ரைலரை பார்த்து முடிவு செய்து விட்டிருந்தேன் ஆனால் ஏதோ காரணத்திற்காக நேற்று தைரியமாக படத்தைப் பார்த்து விட்டேன். சுதா கோங்குரா, சந்தோஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றி மாறன் என்று நான்கு நட்சத்திர இயக்குனர்கள் இயக்கிய திரைப்படங்களின் தொகுப்பு "பாவக் கதைகள்". இதில் மூன்றாவதாக வரும் "வான்மகள்" கதைக்குள் மட்டுமே நம்மால் ஓட்ட முடிகிறது. இதில் கௌதம் மேனனும் சிம்ரனும் நன்றாக நடித்திருந்தாலும் கதை பயணிக்கும் சூழலோடு அவர்களை இணைத்துப் பார்க்க முடியவில்லை. சற்று அந்நியமாகவே பட்டர்...

MAUS

Image
This time I picked up a book from my Eighth Grade daughter for a change. She is reading it as it comes under her school reading curriculum.  It is a Graphic novel written by Art Spiegelman. It is a non-fiction book. The Author collected these information from his father who was a Holocaust Survivor from Poland.       The story starts at Queens, New York and then transports you to Poland where Vladek starts his life as a textile business man. He meets his future wife and gets married. Their Luxurious life changes upside down once Germany invades Poland.  Vladek spends his life in camps as a war prisoner and then somehow manages to reunite with his family. The real bad time starts after that. In the German occupied Poland the Spiegelman family shatter into pieces and dragged to streets. Then they hide into barns and garbage shuts, bribe Polish authorities just to avoid gas chambers and keep themselves alive.  The Author gives accurate information of...

60 வயது மாநிறம்

Image
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, இந்திரஜா மற்றும் பலர் நடித்து 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் "60 வயது மாநிறம்". "Godhi Banna Sadharana Mykattu" என்ற கன்னட படத்தின் ரீமேக் தான் இந்த "60 வயது மாநிறம்". ராதா மோகன் படங்கள் என்றாலே மனித உணர்வுகளுக்கும், உறவுகளுக்கும் முதலிடம் உண்டு. இரட்டை அர்த்த வசனங்களோ, முகம் சுளிக்கும் காட்சிகளுக்கோ இடமில்லை. தேவையில்லாத பாடல்களையோ, ரத்தம் தெறிக்கும் சண்டைக்காட்சிகளையோ, தம் கட்டிக்கொண்டு பஞ்ச் டயலாக் பேசும் கதாநாயகர்களையோ பார்க்கவே முடியாது. யதார்த்தத்திற்கு மிக அருகில் இருக்கும் படங்களே இயக்குனர் ராதா மோகனின் முத்திரை. கதாபாத்திரங்கள் அவ்வப்போது சற்று மிகையாக நடிப்பதாக நமக்குத் தோன்றும் அவ்வளவுதான்!!! "60 வயது மாநிறம்" திரைப்படத்திலும் இதே Formula-வைத்தான் கையாண்டிருக்கிறார்.  மறதி நோயால் (Alzheimer) அவதிப்படும் அப்பாவாக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். எங்கே ஓவர் ஆக்டிங் செய்து விடுவாரோ என்று பயந்து பயந்து தான் படம் பார்த்தேன் ஆனால் நடை, உடை, பாவனை என்று அனைத்திலும் க...

Don't Look Up

Image
Leona DiCaprio, Meryl Streep போன்ற பெயர் போன ஜாம்பவான்களின் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் திரையங்குகளில் வெளிவந்த " Don't Look Up" திரைப்படம் ஆஸ்கார் உட்பட பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்த காரணம் ஒன்றே போதுமே இப்படத்தை பார்ப்பதற்கு!!! Michigan மாகாணத்தில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யும் மாணவியான Jennifer Lawrence  ஆல் பூமியை நோக்கி அதி வேகத்தில் வந்து கொண்டிருக்கும்,  கிட்டத்தட்ட ஆறு மாத காலத்திற்குள் பூமியை தாக்கி அழிக்கவல்ல Comet கண்டறியப்படுகிறது.  இவர்களின் அரிய கண்டுபிடிப்பை உலகம் (அதாவது அமெரிக்கா) எவ்வாறு எதிர் கொண்டு செயலாற்றுகிறது? மக்களும் இந்த உலகமும் காக்கப்பட்டதா? என்பதை நகைச்சுவையுடன் (Satirical Comedy) சொல்லும் திரைப்படம் தான் "Don't Look Up". கடந்த ஆட்சியில் நாம் தினம் தினம் தொலைக்காட்சிகளில், செய்திகளில் எதைப் பார்த்துக் கொண்டிருந்தோமோ அதையே திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். இதைப் போன்ற ஏராளமான இந்தியத் திரைப்படங்களை பார்த்த நமக்கு இது புதிதாக தோன்றவில்லை எனினும் "Cringe" ஆகவும் இல்லை. இடர் காலங்...

The One and Only Ivan - Kid's Book

Image
My Fourth Grade son has just finished reading the book "The One and Only Ivan" written by Katherine Applegate which is loosely based on real life incidents. This Newberry Medal winner book was recommended at school . Once he put down the book, I picked it up. This book is all about Ivan, A silverback Gorilla who lives in the indoor domain located at the mall. He never complains, worries or regret about his life. He has (a stray dog) Bob as his room mate. Stella, a wise and composed Elephant living next door. He befriends with the girl named Julia whose father George works as a Janitor at the Mall. The Mall owner Mack treats Ivan as a son. The situation changes upside down when Stella becomes sick due to her foot injury and a new baby elephant Ruby arrives at the domain. The circumstances force Ivan to become a mighty Silverback who he is really meant to be and how he proves himself forms the rest of the story!!! I like the way how the Author portrayed  each and every char...

Mimi - Hindi Movie

Image
2021-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று என சில பல வலைத்தளங்கள் பரிந்துரைத்ததாலும் Netflix-ல் காணக் கிடைத்ததாலும் நாம் சமீபத்தில் பார்த்து ரசித்த படம் " Mimi". அமெரிக்க தம்பதிகளாக ஜானும் சம்மரும் தங்களுடைய குழந்தையை சுமந்து பெற்றெடுக்க ஒரு வாடகைத் தாயை (Surrogate Mother) சில வருடங்களாக தேடித் கொண்டிருப்பதாக தொடங்குகிறது படம். எதிர்பார்த்தபடி ஒரு தாயை கண்டு பிடிக்க முடியாத வருத்தத்தில் இருக்கும் அவர்களின் பார்வையில் படுகிறாள் டான்சர் Mimi (Kirti Sanon). அவளையே ஒத்துக் கொள்ள வைப்பதாக வாக்களிக்கும் தங்கள் டிரைவர் Bhanu Pratap (Pankaj Tripati)-யை நம்பி பொறுப்பை ஒப்படைகின்றனர். பண தேவை இருப்பதால் மிமியும் இதற்கு ஒப்புக் கொள்ள அனைத்தும் சுமூகமாக செல்கிறது. குழந்தை பிறப்பதற்கு சில மாதங்களே இருக்கும் சமயத்தில் எதிர்பாரா காரணங்களால் அமெரிக்க தம்பதியர் குழந்தையை கை விட அதை என்ன செய்வது என்று தெரியாமல் முச்சந்தியில் நிராதரவாக  நிற்கிறாள் மிமி. மிமி குழந்தையை பெற்றெடுத்தாளா? திருமணமாகாமல் கர்ப்பிணியாக நிற்கும் அவளை Judge செய்யும் சமூகத்தை எப்படி சமாளித்தாள்?...

சத்திய சோதனை

நான் சமீபத்தில் வாசித்து முடித்த புத்தகம் மகாத்மா காந்தியின் சுயசரிதையான "சத்திய சோதனை- ரா. வேங்கடராஜுலு-வின் தமிழாக்கம்".  623 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தை (பனிரெண்டாம் பதிப்பு) நவஜீவன் பிரசுலாயம் வெளியிட்டுள்ளது.  இந்தியர்களாக பிறந்த அனைவரும் தங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு சமயத்தில் இப்புத்தகத்தை கடந்துதான் வந்திருப்பர். முழுவதுமாக வாசிக்கும் வாய்ப்பு இல்லாதிருந்தாலும் இப்புத்தகத்தில் குற்றிப்பிடப்பட்டுள்ள ஒரு  சில முக்கிய நிகழ்வுகளையாவது  அறியாதவர் இருப்பது அரிது. சராசரி மனிதனாக இருந்த மோகன்ராம் காந்தி எவ்வாறு மகாத்மா ஆனார், அவரின் வாழ்க்கைப்பயணம்  அவரை எவ்வாறு அப்பாதையில் இட்டுச் சென்றது என்பதை இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. செயற்கைத்தன்மை எள்ளளவும் இன்றி மகாத்மா இதை விவரித்திருப்பது அற்புதம்.  காலம் கடந்தும் இப்புத்தகம் நிலைத்து  நிற்பதற்கு அதுவே காரணம் என்றும் தோன்றுகிறது. அவரின் இளைமைக்காலங்களைப் பற்றி அவர் எழுதியிருக்கும் அத்தியாயங்கள் நாம் அனைவரும் அறிந்ததே. பின் அவர் பாரிஸ்டர் ஆவதற்கு லண்டன் செல...