Posts

நாயகன் (1987)

Image
அனைவராலும் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்படும் சரித்திரப்படமான பொன்னியின் செல்வன் -2 வரும் ஏப்ரல் 28-ம் நாள் உலகெங்கும் வெளிவர இருக்கும் இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் 35 வருடங்களுக்கு முன் வெளிவந்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்த "நாயகன்" திரைப்படத்தைப் பற்றி எனது கருத்துக்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே நாயகன் திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்து வந்திருக்கிறேனே தவிர முழுப்படத்தையும் கவனமாக பார்த்ததில்லை ஏனோ (இளவயதில்) பார்க்கத் தோன்றவும் இல்லை. "மணிரத்னம் படத்துக்கு  கூட்டிட்டு போனாலே (காட்சிகள் இருட்டாக இருப்பதால்) பசங்களுக்கு காச்சல் வந்துருது" என்ற எனது அம்மாவின் கமெண்ட் காரணமாகவும் இருக்கலாம் 😆 நாயகன் படம் என்றாலே "நீங்க நல்லவரா? கெட்டவரா?", "அவங்கள நிறுத்த சொல்லு நானும் நிறுத்துறேன்", "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல" ", Mera Baba Mar Gaya" போன்ற famous வசனங்களும் கமலும் இளையராஜாவும் கரகர குரலில்  கண்ணீரை வரவழைக்கும் வண்ணம் பாடி இருக்கும்  "தென்பாண்டிச் சீமை...

Doctor G

Image
ஆயுஷ்மான் குரானா-வின் நடிப்பில் இயக்குனர் Anubhuti Kashyap-ன் இயக்கத்தில் சென்ற வருட கடைசியில் வெளிவந்த திரைப்படம் "Doctor  G". போபாலில் M.B.B.S முடித்த கையோடு M.D. Ortho படிக்க ஆசைப்படும் கதாநாயகன்  பல்வேறு காரணங்களால் M.D. Gyno-ல் (விருப்பமில்லாமல்) சேர்கிறார்.அதனால் என்னனென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்? எவ்வாறு அவற்றை சமாளிக்கிறார்? மகப்பேறு மருத்துவம் பெண்களுக்குரியது என்ற அவருடைய குறுகிய பார்வை மாறியதா? போன்ற கேள்விகளுக்கு விடையளித்து சுபத்தில் முடிவடைகிறது "Doctor G" திரைப்படம். வழக்கம்போல் ஆயுஷ்மான் உதய் alias Guddy என்ற கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக சென்று அமர்கிறார் ஆனால் அதுவே அவருக்கு பாதகமாகவும் அமைந்து விடுகிறது ஏனெனில் அவருடைய முந்தைய படங்களை நினைவுறுத்தும் வண்ணமே இந்த கதாபாத்திரமும் எழுதப்பட்டிருப்பது போன்ற எண்ணம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது. ஆணாதிக்க, பிற்போக்கு வாதியாக அவரை சித்தரித்த விதத்தில் அவர் மேல் நமக்கு ஒன்றும் அவ்வளவு கோபம் வரவில்லை மாறாக அவர் கூறும் சில விஷயங்கள் நியாயமாகவே படுகிறது. அவரின் நண்பராக வரும் "Chaddi" நன்றாக நடித்திருந்த...

ஒரு புளியமரத்தின் கதை - புத்தக விமர்சனம்

Image
தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவரான சுந்தர ராமசாமியின் படைப்புகளில் நான் வாசித்த முதல் புத்தகம் "ஒரு புளியமரத்தின் கதை". 1966-ல் வெளிவந்திருக்கும் இந்நாவல் தான் அவரின் முதல் படைப்பும்  கூட!!! நான் காற்று வாக்கில் இப்புத்தகத்தைப் பற்றியும் அதன் ஆசிரியரைப் பற்றியும் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்தாளர்  ஜெயமோகனின் வலைத்தளத்திலும் சிலமுறை வாசித்திருக்கிறேன் எனினும் அவரின் கதைகள் எதையும் வாசிக்கும் வாய்ப்பு இதுவரையிலும் அமையவில்லை. இப்புத்தகத்தை கையில் எடுக்கும் முன் கதை இப்படி இருக்கும் என்று என் மனதில் ஒரு சித்திரத்தை வரைந்து வைத்திருந்தேன் ஆனால் அதை முற்றிலும் தவிடுபொடி ஆகிவிட்டது இந்நாவல் என்று சொன்னால் மிகை ஆகாது. ஆசிரியர் தன்னுடைய கோணத்தில் இருந்தே இக்கதையை  சொல்லிக்கொண்டு வருகிறார். வாழ்வில் அவர் சந்தித்த, சிலாகித்த மனிதர்களை பின்புலத்திலும் புளியமரத்தை முன் புலத்திலும் கொண்டு கதையை நகர்த்துகிறார். தொடக்கத்தில் நாகர்கோவில் வட்டார வழக்கை வாசிக்க எனக்கு சிரமமாக இருந்தது தான் எனினும் கதையின் விறுவிறுப்பு அதை ஒரு பொருட்டாக நினைக்க விடவில்லை. முதல் 6,7...

சுழல் - The Vortex

Image
கடந்த வருடம் அமேசான் Prime - ல் வெளிவந்த குறுந்தொடர்களில் ஒன்று 'சுழல் - The Vortex". பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், இளங்கோ என்று நடிகர் பட்டாளங்களை முன்னிறுத்தி "புஷ்கர்- காயத்ரி" எழுதிய கதையை "பிரம்மா- அனுசரண் முருகையன்" இயக்கியிருக்கிறார்கள். சாம்பலுர் என்னும் கிராமத்தில் ஒரே ஒரு சிமெண்ட் தொழிற்சாலை தான் அனைவரின் வாழ்வாதாரம். அங்கு தொழிலார்களுக்கும் முதலாளிக்கும் இடையே பிரச்சனை..தலைமை தாங்கி போராட்டத்தை நடத்துகிறார் யூனியன் தலைவர் ஷண்முகம் (பார்த்திபன்). அந்த ஊரின் காவல்துறை (ஸ்ரேயா மற்றும் கதிர்) பண முதலைகளின் பக்கம் நிற்கிறது. சாம்பாலூரில் மயான கொள்ளை திருவிழா தொடங்குகிறது. அதே நாளில் தொழிற்சாலையில் தீ பிடிக்கிறது. இந்த களேபரங்களுக்கு இடையே சண்முகத்தின் மகள் நிலா காணாமல் போகிறாள். மேல்கூறிய பிரச்சனைகளில் சுழலை ஒவ்வொன்றாக களைந்து சீர்படுத்துகிறார்கள் 8-வது  எபிசோடில் முடிவில். நிலா கடத்தப்பட்டிருக்கிறாள் என்று கதிர் கண்டறிவதும் அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருந்தது. திடீரென்று நிலாவின் பிணம் ஏரியில் ...

Kooman (மலையாளம் )

2023-ம் ஆண்டில் நான்  பார்த்த படங்களில் விமர்சனத்திற்கும் பிறருக்கு பரிந்துரைக்கவும் தெரிவான படம் "Kooman". படம் தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் ஒரு மாதிரியாக நம்மால் கதையை யூகிக்க முடிகிறது என்றாலும் முழுதாக அந்த யூகத்தை மெய்யாகாமல் நம்மை பரபரக்க செய்து வெற்றி அடைகிறார் "திரிஷ்யம்" புகழ் இயக்குனர்  "Jeetu Joseph". வழக்கமான மலையாளப் படங்களைப் போல மெதுவாக விரிவாகச் சென்றாலும் விறுவிறுப்புக்கு சற்றும்  பஞ்சமில்லை.  மலையாள இயக்குனர்கள் ஒரு கதாபாத்திரத்தைக் கூட வீணடிப்பதில்லை என்று நான் என்னுடைய பல விமர்சனக்களில் சிலாகித்து  எழுதியதுண்டு. இதிலும் அப்படியே. அனைவரும் அவரவர் பணியை செவ்வனே செய்து விடுகிறார்கள். கதாநாயகனாக வரும் ஆசிப் அலி - கண்களாலே மிரட்டுகிறார் - Fahad Fasil-ஐ நினைவூட்டுகிறார். [அவர் நடித்த "Kuttavum Sikshayum" படமும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மிகவும் பிடிக்கும் ] மணியனாக வரும் "ஜாபர் இடுக்கி"-க்கு வித்யாசமான கதாபாத்திரம். அனாசயமாக அசத்தி இருக்கிறார். படத்தின் முடிவு சற்று commercial பாதையை நோக்கி சென்று விட்டதோ என்ற கு...

KGF

 அதீத வன்முறைக் காட்சிகள், Anti-Hero, Punch/Cringe Dialogues இவைகளைக் கண்டாலே அத்திரைப்படத்தை choice-ல் விட்டுவிடும் வழக்கம் கொண்ட நான் இந்த மூன்று அம்சங்களையும் தன்னகத்தே கொண்ட 'KGF" திரைப்படத்தை (ஏதோ ஒரு உந்து சக்தி என்னை ஊக்கித்தள்ள) சமீபத்தில் பார்த்து விட்டேன். படம் ஆரம்பித்த சில நிமிடங்கள் "Over Build-up ஆ இருக்கே", "ஐயோ முடியலடா சாமி", "இப்பவே கண்ண கட்டுதே" போன்ற வசனங்களை Mind Voice-ல் ஓட விட்டு அமர்ந்திருந்தேன் ஆனால் எப்போது நான் படத்தின் ஓட்டத்தோடு  ஒன்றிப்போனேன்? என்று குறிப்பிட்டு கூற முடியாத ஒரு தருணத்தில் ஆ என்று  என்னையே நான் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டேன்!!! படத்தின் நிறை, குறைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம் ஆனால் இப்படம் தேசிய அளவில் வெற்றி பெற்றதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது அது என்னவென்று அறுதியாக கோடிட்டு காட்ட என்னால் முடியவில்லை. விறு விறுவிறுவென்று நகரும் திரைக்கதையா? Rocky Bhai ஆக வரும் Yash மீது நமக்கு எந்தவித "Predefined Judgement"-ம் இல்லாததாலா? களத்தில் நம்மை கட்டிப்போடும் BGM மற்றும் பாடல்களா? அம்மா செண்டிமெண்...

Esperanza Rising - Book Review

Image
United States of America is a land of immigrants. Every immigrant has a story to tell and have experiences to share. Esperanza Rising is one such book where the Protagonist Esperanza's life switches from one side of the river to other side with the blink of an eye. My 5th grade son had this book for his recommended reading list and as a class they read it for a quarter. When he was half way through he told me that I should give it a try. This time we didn't buy the book therefore once he finished reading it, he rented one through his digital library and insisted me to read it and write a review. Here I am with my thoughts... Our lead character lives in Mexico and enjoys her life as a Pampered Princess. Unexpected chain of events forces her not only to flee her home country and also makes her a poor peasant. The Author Pam Munoz Ryan wrote the story from real life incidence of her grandmother Esperanza so there are so many heart touching and tear jerking moments are present. The...