Posts

The Curious Incident of the dog in the night-time

Image
Generally Students of middle school and high school will have summer reading list. There will be numerous books in the list, they can pick one book from it and read it during the break. Here I got my list from my kids! The books that they enjoyed during 2022-2023 academic year. Firstly I picked up this book written by Mark Haddon. This book was in my high school daughter's (9th grade) curriculum. When she was in the middle of the book, she told me that I must read the book because it is very good. Here I read it on and off for a week and finished it. Christopher Boone, 15 year old boy narrates the story of himself. He lives with his father and mentions that he lost his mother 2 years ago in a heart attack. One fine evening he finds his neighbor's dog being murdered by someone with the garden fork. Police arrest him for the murder and shortly releases him which makes him want to investigate "who killed the dog?". He writes the investigation as a book! (Which is the one...

Gulmohar (Hindi)

Image
சமீபமாக நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் Hot Star-ல் பார்த்த குடும்பச் சித்திரம் "Gulmohar". தனது மகன் ( Manoj Bajpayee) மருமகள் (Simran) பேரன் பேத்திகள் சகிதம் வசதியான மாளிகையில் வாழ்ந்து வரும் பாட்டி (Sharmila Tagore) சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வாழ்ந்து வந்த வீட்டை விற்று விடுகிறார். அனைவரும் வெல்வேறு இடங்களுக்கு செல்லவிருக்கும் நிலையில் திரைப்படத்தை தொடங்குகிறார் இயக்குனர். ஒற்றுமையாக இருந்த குடும்பம் பிரிய வேண்டிய நிலை வந்து விட்டதே என்று மகன் மிகவும் வருந்துகிறார் ஆனால் 30+ வருடங்களாக ஒரே வீட்டில் இருந்தும் அவர்கள் எவ்வாறு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் வாழ்ந்தனர் என்பதை பல்வேறு நிகழ்வுகள், Flash back மூலம் Audience-களான நமக்கு புரியவைத்தபடி கதையை முன் நகர்த்தி திரைப்படத்தை சுபத்தில் முடித்து வைக்கிறார் இயக்குனர் Rahul. V. Chittella. கதை என்று பெரிதாக ஒன்றுமில்லை. படத்தை இன்றைய காலகட்டத்தோடு ஓட்ட வைக்க பேரனின் App Start-Up, பேத்தியின் காதல் வாழ்கை மற்றும் பாட்டியின் கடந்த காலத்தில் ஏற்பட்ட உணர்வு மாற்றங்கள், குடும்பமாக விழாவில் மது அருந்துதல்  போன்ற யுக்திகளை  பயன் பட...

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Image
2020-ம் ஆண்டு மார்ச் மாதம் உலகெங்கும்  கரோனாவின் தீவிரம் பரவத் தொடங்கி கிட்டத்தட்ட அனைவருமே வீட்டில் முடங்க வேண்டிய சூழல் நிலவியது. குறைந்த பட்சம் அடுத்த ஆறு மாதத்திற்காவது இது தொடரும் என்ற நிலை வந்த பொழுது நம்மில் பலரும் பல புதிய பழக்க வழக்கங்களை கடை பிடிக்கத் துவங்கினோம். அதில் பாரபட்சமின்றி உலக மக்கள் அனைவராலும் பின்பற்றப்பட்ட ஒன்று OTT-ல் படம் பார்ப்பது. நானும் அதற்கு முன் Streaming Service -களில்  படம் பார்த்தவள் தான் என்றாலும் இந்த அசாதாரணமான Quarantine காலகட்டத்தில் அதன் எண்ணிக்கை பன்  மடங்காக பெருகியதோடு மட்டுமல்லாமல் அதன் எல்லையும் தமிழ் படங்களைக் கடந்து விஸ்தாரமாக விரியத் துவங்கியது எனலாம். இந்த OTT வசதியை மிகவும் லாவகமாக பயன்படுத்திக் கொண்ட பட உலகம் என்றால் அது 'Molly Wood" என்று அழைக்கப்படும் மலையாள பட உலகம் தான். அதிக பொருட் செலவில்லாமல் குறைந்த தினங்களில் படங்களை முடிக்கும் மலையாள இயக்குனர்கள் இந்த புதிய வாய்ப்பை இனம் கண்டு  வாரம் தவறாமல் அனைத்து OTT தளங்களிலும் தரமான மலையாளப் படங்கள் வந்த வண்ணம் இருக்கும் படி பார்த்துக் கொண்டனர். இன்றும் அது தொடர்கிறது...

நாயகன் (1987)

Image
அனைவராலும் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்படும் சரித்திரப்படமான பொன்னியின் செல்வன் -2 வரும் ஏப்ரல் 28-ம் நாள் உலகெங்கும் வெளிவர இருக்கும் இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் 35 வருடங்களுக்கு முன் வெளிவந்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்த "நாயகன்" திரைப்படத்தைப் பற்றி எனது கருத்துக்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே நாயகன் திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்து வந்திருக்கிறேனே தவிர முழுப்படத்தையும் கவனமாக பார்த்ததில்லை ஏனோ (இளவயதில்) பார்க்கத் தோன்றவும் இல்லை. "மணிரத்னம் படத்துக்கு  கூட்டிட்டு போனாலே (காட்சிகள் இருட்டாக இருப்பதால்) பசங்களுக்கு காச்சல் வந்துருது" என்ற எனது அம்மாவின் கமெண்ட் காரணமாகவும் இருக்கலாம் 😆 நாயகன் படம் என்றாலே "நீங்க நல்லவரா? கெட்டவரா?", "அவங்கள நிறுத்த சொல்லு நானும் நிறுத்துறேன்", "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல" ", Mera Baba Mar Gaya" போன்ற famous வசனங்களும் கமலும் இளையராஜாவும் கரகர குரலில்  கண்ணீரை வரவழைக்கும் வண்ணம் பாடி இருக்கும்  "தென்பாண்டிச் சீமை...

Doctor G

Image
ஆயுஷ்மான் குரானா-வின் நடிப்பில் இயக்குனர் Anubhuti Kashyap-ன் இயக்கத்தில் சென்ற வருட கடைசியில் வெளிவந்த திரைப்படம் "Doctor  G". போபாலில் M.B.B.S முடித்த கையோடு M.D. Ortho படிக்க ஆசைப்படும் கதாநாயகன்  பல்வேறு காரணங்களால் M.D. Gyno-ல் (விருப்பமில்லாமல்) சேர்கிறார்.அதனால் என்னனென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்? எவ்வாறு அவற்றை சமாளிக்கிறார்? மகப்பேறு மருத்துவம் பெண்களுக்குரியது என்ற அவருடைய குறுகிய பார்வை மாறியதா? போன்ற கேள்விகளுக்கு விடையளித்து சுபத்தில் முடிவடைகிறது "Doctor G" திரைப்படம். வழக்கம்போல் ஆயுஷ்மான் உதய் alias Guddy என்ற கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக சென்று அமர்கிறார் ஆனால் அதுவே அவருக்கு பாதகமாகவும் அமைந்து விடுகிறது ஏனெனில் அவருடைய முந்தைய படங்களை நினைவுறுத்தும் வண்ணமே இந்த கதாபாத்திரமும் எழுதப்பட்டிருப்பது போன்ற எண்ணம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது. ஆணாதிக்க, பிற்போக்கு வாதியாக அவரை சித்தரித்த விதத்தில் அவர் மேல் நமக்கு ஒன்றும் அவ்வளவு கோபம் வரவில்லை மாறாக அவர் கூறும் சில விஷயங்கள் நியாயமாகவே படுகிறது. அவரின் நண்பராக வரும் "Chaddi" நன்றாக நடித்திருந்த...

ஒரு புளியமரத்தின் கதை - புத்தக விமர்சனம்

Image
தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவரான சுந்தர ராமசாமியின் படைப்புகளில் நான் வாசித்த முதல் புத்தகம் "ஒரு புளியமரத்தின் கதை". 1966-ல் வெளிவந்திருக்கும் இந்நாவல் தான் அவரின் முதல் படைப்பும்  கூட!!! நான் காற்று வாக்கில் இப்புத்தகத்தைப் பற்றியும் அதன் ஆசிரியரைப் பற்றியும் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்தாளர்  ஜெயமோகனின் வலைத்தளத்திலும் சிலமுறை வாசித்திருக்கிறேன் எனினும் அவரின் கதைகள் எதையும் வாசிக்கும் வாய்ப்பு இதுவரையிலும் அமையவில்லை. இப்புத்தகத்தை கையில் எடுக்கும் முன் கதை இப்படி இருக்கும் என்று என் மனதில் ஒரு சித்திரத்தை வரைந்து வைத்திருந்தேன் ஆனால் அதை முற்றிலும் தவிடுபொடி ஆகிவிட்டது இந்நாவல் என்று சொன்னால் மிகை ஆகாது. ஆசிரியர் தன்னுடைய கோணத்தில் இருந்தே இக்கதையை  சொல்லிக்கொண்டு வருகிறார். வாழ்வில் அவர் சந்தித்த, சிலாகித்த மனிதர்களை பின்புலத்திலும் புளியமரத்தை முன் புலத்திலும் கொண்டு கதையை நகர்த்துகிறார். தொடக்கத்தில் நாகர்கோவில் வட்டார வழக்கை வாசிக்க எனக்கு சிரமமாக இருந்தது தான் எனினும் கதையின் விறுவிறுப்பு அதை ஒரு பொருட்டாக நினைக்க விடவில்லை. முதல் 6,7...

சுழல் - The Vortex

Image
கடந்த வருடம் அமேசான் Prime - ல் வெளிவந்த குறுந்தொடர்களில் ஒன்று 'சுழல் - The Vortex". பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், இளங்கோ என்று நடிகர் பட்டாளங்களை முன்னிறுத்தி "புஷ்கர்- காயத்ரி" எழுதிய கதையை "பிரம்மா- அனுசரண் முருகையன்" இயக்கியிருக்கிறார்கள். சாம்பலுர் என்னும் கிராமத்தில் ஒரே ஒரு சிமெண்ட் தொழிற்சாலை தான் அனைவரின் வாழ்வாதாரம். அங்கு தொழிலார்களுக்கும் முதலாளிக்கும் இடையே பிரச்சனை..தலைமை தாங்கி போராட்டத்தை நடத்துகிறார் யூனியன் தலைவர் ஷண்முகம் (பார்த்திபன்). அந்த ஊரின் காவல்துறை (ஸ்ரேயா மற்றும் கதிர்) பண முதலைகளின் பக்கம் நிற்கிறது. சாம்பாலூரில் மயான கொள்ளை திருவிழா தொடங்குகிறது. அதே நாளில் தொழிற்சாலையில் தீ பிடிக்கிறது. இந்த களேபரங்களுக்கு இடையே சண்முகத்தின் மகள் நிலா காணாமல் போகிறாள். மேல்கூறிய பிரச்சனைகளில் சுழலை ஒவ்வொன்றாக களைந்து சீர்படுத்துகிறார்கள் 8-வது  எபிசோடில் முடிவில். நிலா கடத்தப்பட்டிருக்கிறாள் என்று கதிர் கண்டறிவதும் அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருந்தது. திடீரென்று நிலாவின் பிணம் ஏரியில் ...