Posts

பொன்னியின் செல்வன் - 1

Image
2007-ம் ஆண்டு என் மகளின் வருகையை எதிர்பார்த்து கொண்டிருந்த தருணம். அவளுக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் என் கணவர் பரிந்துரைத்த பெயர்கள் நந்தினி, வானதி, பூங்குழலி. என்ன இது பட்ட பழைய பெயர்கள் என்று கேட்ட என்னிடம் "காலத்தால் அழியாத கதாபாத்திரங்கள்" என்று பொன்னியின் செல்வன் நாவலைப்  புகழ்ந்து பேசினார் என் கணவர். 2017-ம் ஆண்டு பொன்னியின் செல்வன் நாவலைப்  படிக்க நேர்ந்தது. கதையின் கரு பிடித்திருந்தாலும் போக்கு சலிப்பை வரவழைத்தது. என்னால் ஆஹா ஓஹோ என்றெல்லாம் ரசிக்க முடியவில்லை. இன்று மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் PS-1 திரைப்படத்தைப் பார்க்கும் பொழுது ரசிக்காமல் இருக்க முடியவில்லை. நாம் Promo-வில் பார்த்து வியந்த காட்சிகள், வசனங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கிறது. தொய்வின்றி வெகு வேகமாக நகரும் திரைப்படம் ஒரு Extended Promo-வைப் பார்ப்பது போலத்தான் இருந்தது. கேமராவும் அங்கும் இங்கும் அலை பாய்ந்து நம்மையும் அந்த ஓட்டத்தில் இணைக்கிறது. அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் ...

தளபதி (1991)

Image
முன் குறிப்பு : கல்கியின் காலத்தால் அழியாத தேசியமயமாக்கப்பட்ட "பொன்னியின் செல்வன்" நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். அனைவராலும் எதிர்பார்க்கப்படும் (ஐயோ..இவர் சொதப்பாம எடுக்கணுமே) இத்திரைப்படம் இம்மாத இறுதியியில் திரைக்கு வருகிறது. 1991-ம் வருடம் தீபாவளிக்கு வெளி வந்த ரஜினியின் திரைப்படம் "தளபதி". வழக்கமாக சூப்பர் ஸ்டார் படம் என்றால் தியேட்டருக்கு சென்று குடும்பத்துடன் படம் பார்க்கும் எங்கள் குடும்பம் அந்த வருடம் செல்லவில்லை காரணம் மணிரத்னம் படமெல்லாம் சின்ன பசங்களுக்கு பிடிக்காது என்ற காரணம் ஆனால் அடுத்த பத்து நாட்களுக்குள்ளேயே படத்தை கேபிள் டிவியில் போட்டுவிட்டார்கள் நாங்களும் பார்த்து விட்டோம் அது வேறு விஷயம். பத்து வயதிற்குள் இருந்த எனக்கு (அப்போது) அந்தப்  படம் அவ்வளவாக பிடிக்கவில்லை எனினும் தளபதி போன்ற போர் உடையில் ரஜினி இருந்த போஸ்ட்ரைப் பார்த்ததால் இப்படத்தைப்  பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. சில படங்களை நாம் சிறுவயதில் பார்த்திருந்தாலும் அதன் காட்சிகளை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு அமைந்திருக்கும் அதனால் அதன் நினைவுகள் நம் ம...

Laal Singh Chaddha (LSC)

Image
ஆஸ்கார் விருது பெற்ற "Forrest Gump"  என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் என்ற அறிவிப்போடு பலரால், முக்கியமாக என்னைப் போன்ற 'Tom Hanks" ரசிகர்களால் பெரிதும்  எதிர் பார்க்கப்பட்ட திரைப்படம் "Laal Singh Chaddha (LSC)". பல வித காரணங்களுக்காக  இத்திரைப்படத்தை புறக்கணிக்கக் கோரி சமூக வலைத்தளங்களில் கடும்  பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில்  இம்மாதம் 11-ம் தேதி இந்தியாவில் Laal Singh Chaddha (LSC) திரைக்கு வந்துள்ளது.  இயக்குனர் Advait Chandhan கதையில் பெரிதாக மாற்றம் ஏதும் செய்யாமல் நம் நாட்டிற்கேற்ப திரைக்கதையில் மாற்றங்களைச் செய்து ஆங்காங்கே ரசிக்கும் விதமான காட்சிகளோடு  எமோஷனல் மற்றும் நகைச்சுவை என்னும் உப்பு. காரத்தைக் கலந்து சுவையாகவே படைத்திருக்கிறார். எழுபதுகளில் தொடங்கும்  Laal Chaddha-வின் வாழ்கை அந்தந்த கால கட்டத்தில் நிகழும் முக்கிய நிகழ்வுகளால்  எவ்வாறு திசை திரும்புகிறது என்பதை காட்டியவாறு நிறைவுறுகிறது. முக்கிய நிகழ்வுகள் என்றாலே அரசியலும் சினிமாவும் தானே!!! ஆங்கிலப் படத்தில் நாயகன் கல் பெஞ்சில் அமர்ந்தவாறு கதை சொல்லுவார் ஆனால...

Rocketry : The Nambi effect

Image
நடிகர் ஆர்.மாதவன் உண்மைக்கதையை கையில் எடுத்துக் கொண்டு தயாரித்து, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அவதரித்திருக்கும் திரைப்படம் "Rocketry : The Nambi effect". நாராயணன் நம்பி என்பவர் யார்? ISRO - வில் அவர் ஆற்றிய பணி எத்தகையது, விண்வெளி ஆராய்ச்சியில் அவரின் பங்களிப்பு எந்த அளவிற்கு போற்றுதற்குரியது, எதிர்பாரா விதமாக அவருக்கு ஏற்பட்ட அவமானம் என்ன? போன்ற கேள்விகளுக்கு நம்மில் பலர் திரைப்படம் பார்க்காமலேயே சமூக வலைத்தளங்களின் உதவியுடன் விடை அறிந்து கொண்டுவிட்டோம் ஆகையால் இந்த திரைப்படத்தை அந்த கோணத்தில் அலசுவதும் விவாதிப்பதும் தேவையற்றது என்பது எனது தாழ்மையான கருத்து. Rocketry : The Nambi effect ஒரு திரைப்படமாக என்னை எந்த அளவிற்கு கவர்ந்தது என்பதை மட்டுமே  உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஓடும் இத்திரைப்படத்தை பரபரப்பு குறையாமல் மாதவன் கொடுத்திருக்கிறார் என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.  இயக்குனர் மணிரத்தினத்தின் சாயல் காட்சி அமைப்புகளில் உணர முடிந்தது எனினும் அனைவரும் காதில் கேட்கும் விதமாக  வசனங்களை பேசி நடித்திருப்பது ஆறுதல்.  பட...

எதற்கும் துணிந்தவன் (ET)

Image
Netflix-ல் படம் பார்த்து முடித்த கையோடு YouTube - ல் ப்ளூ சட்டை மற்றும் காக்கிஸ் டாக்கீஸ் விமர்சனங்களைப் பார்த்தேன். நான் என்ன எழுத வேண்டும் என்று நினைத்தேனோ அதையெல்லாம் அவர்களே புட்டு புட்டு வைத்திருந்தமையால் சில விவரங்களை Skip செய்து விட்டு கீழ்கண்ட விமர்சனத்தை எழுதுகிறேன். கடந்த நான்கு ஐந்து படங்களாகவே சூர்யா கனமான பாத்திரங்களையும் நடைமுறை பிரச்சனைகளை மையமாகக் கொண்ட கதைகளை மட்டுமே தெரிவு செய்து நடிக்கிறார் இருந்தும் படங்கள் அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்படுகிறதா என்றால் இல்லை. இயக்குனர் பாண்டிராஜின் படங்கள் இதற்கு முன் இந்த அளவிற்கு குளறுபடியாக இருந்ததில்லை. கதாநாயகி வரும் ஓரிரு காட்சிகள், திருவிழா காட்சிகள் தவிர திரைக்கதையில் சுவாரசியம் இல்லை. அதில் நடிக்கும் நடிகர்கள் பரபரப்படைகிறார்கள் ஆனால் நமக்கோ "இப்படியே எத்தனை சீன் தான் வரும்" என்று தோன்றுகிறது. கதை ஓகேயா என்று பார்த்தால் அது எங்கும் நகரவே இல்லை. பாண்டிராஜ் படத்திற்கு ஒரு மாஸான பெயரையும் விரல் விட்டு எண்ணக்கூடிய நல்ல காட்சிகளையும் முதலில் எழுதிவிட்டு அதை சுற்றி மையக் கதையை எழுதினாரா என்று தெரியவில்லை (Beast படத்தைப...

Sharmaji Namkeen (Hindi)

Image
சமீப காலமாக குடும்பப் படங்கள் வரிசையில் குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கும் சிக்கல்களை காட்டுவதோடு மட்டுமல்லாமல் வயதானவர்கள் இந்த நவீன உலகத்தில் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டும் பல்வேறு திரைப்படங்கள் வந்த வண்ணம் உள்ளன அவற்றில் ஒன்று தான் இந்த " Sharmaji Namkeen". இள வயதில் நாம் நம் குழந்தைகளை அவர்கள் போக்கில் விடுவதில்லை. குடும்ப மரியாதை அவர்களின் எதிர்காலம் என்று கட்டுப்படுத்தி வைக்கிறோம். நமக்கு வயதாகும் போது அதையே அவர்களும் நமக்குத் திரும்பச்  செய்கின்றனர் என்பதை   நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் Hitesh Bhatia. சராசரியான வேலையில் இருக்கும் ஒருவர் Retirement-குப் பிறகு தனக்கு விருப்பமான காரியங்களில் இறங்குவது என்பது எத்தனை குதிரைக் கொம்பான விஷயம். சமூகம் அவர்களை அந்நியமாகப் பார்ப்பதும் குழந்தைகள் அவர்களை பயனற்றவர்களாகப் பார்ப்பதும் என அவர்களின் நிலைமை பரிதாபம் தான். Bobby படத்தில் பால் வடியும் முகத்துடன் அறிமுகமான நமது  ரிஷி கபூரின் கடைசிப்படம் "Sharmaji Namkeen".  படம் முடிவதற்குள் உடல்நலக் குறைவால் அவர் கால...

பாவக் கதைகள் - பார்க்கலாமா?

Image
பொதுவாகவே வன்முறைக் காட்சிகள், எமோஷனல் காட்சிகளால் நிரப்பப்பட்டிருக்கும் திரைப்படங்கள், Psychological திரில்லர் என்று சொல்லக்கூடிய மர்மப் படங்கள் குறிப்பாக குழந்தைகளை கடத்தி வைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களை சமீபகாலமாக நாங்கள் தவிர்த்து விடுவதுண்டு. மேற்கூறிய காரணங்களுக்காகவே நான் பார்க்காமல் Choice-ல் விட்ட  திரைப்படங்களில் ஒன்று 2020 டிசம்பரில் வெளிவந்த "பாவக் கதைகள்".  "நான்கு குறும்படங்களில் ஒன்று கூட நம் ரசனைக்கு ஒத்து வராது போலவே? " என்று ட்ரைலரை பார்த்து முடிவு செய்து விட்டிருந்தேன் ஆனால் ஏதோ காரணத்திற்காக நேற்று தைரியமாக படத்தைப் பார்த்து விட்டேன். சுதா கோங்குரா, சந்தோஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றி மாறன் என்று நான்கு நட்சத்திர இயக்குனர்கள் இயக்கிய திரைப்படங்களின் தொகுப்பு "பாவக் கதைகள்". இதில் மூன்றாவதாக வரும் "வான்மகள்" கதைக்குள் மட்டுமே நம்மால் ஓட்ட முடிகிறது. இதில் கௌதம் மேனனும் சிம்ரனும் நன்றாக நடித்திருந்தாலும் கதை பயணிக்கும் சூழலோடு அவர்களை இணைத்துப் பார்க்க முடியவில்லை. சற்று அந்நியமாகவே பட்டர்...