கர்ணன்
ஏப்ரல் மாதம் Prime-ல் வெளியான இப்படத்தைப் பார்க்க இப்பொழுதுதான் எனக்கு தைரியம் வந்தது. படத்தின் One Liner-யைத் தவிர வேறு விவரங்கள் எனக்குத் தெரியாததாலும் இப்படத்தைப் பற்றிய Promo-க்களை அதிகம் பார்க்காததாலும் எனக்கு படம் நேற்று வெளிவந்தது போன்ற தாக்கத்தையே ஏற்படுத்தியது. "பரி ஏறும் பெருமாள்"-யைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு தான் இந்த " கர்ணன்". எதிர்பார்த்த அளவு படத்தில் வன்முறை இல்லை எனினும் "இதோ இவனை கொலை செஞ்சுருவாங்க போல", "இந்த சின்ன பையனை ஏதாச்சும் பண்ணிருவங்களோ" என்ற பதைபதைப்புடனேயே படம் பார்க்க வேண்டி இருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையும் அதற்குத் துணை செல்கிறது. பாரதிராஜாவை அடுத்து மாரி செல்வராஜ் கிராமத்து வாழ்க்கையையும் அதன் மக்களையும் நம் கண் முன்னே அரிதாரம் பூசாமல் காட்டி இருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது. சொந்த அனுபவம் இல்லாமல் இதைச் செய்யவே முடியாது. மனதில் இருந்து வந்ததால் தான் வெற்றியும் அடைந்திருக்கிறது. படத்தில் இயக்குனர் பல்வேறு குறியீடுகளின் மூலம் ஏகப்பட்ட சங்கதிகளைச் Subtle ஆக சொல்லிக்கொண்டே செல...