Posts

Spider - Man : Brand New Day

Image
 Once upon a time, people went crazy for comics and followed them passionately. Over time, as medium trends shifted, these stories were adapted into movies and TV series so fans could see their favorite worlds and characters brought to life. That trend continues today. With the help of modern technology, imagination—and audience expectations—have reached incredible new heights. After a long time, I watched a movie so close to its release day. It was my first time sitting in a theater packed almost entirely with teenagers! The movie picks up right where Spider-Man: No Way Home left off. Our friendly neighborhood superhero is friendlier than ever, swinging around the city while keeping his identity strictly anonymous behind the mask. He spends extra shifts helping the police keep the streets safe—which makes sense, given he no longer has anyone waiting for him at home. When a new villain appears and threatens the city, the audience seems far more interested in seeing how MJ and Ned ...

Sapta Sagaradaache Ello - Side A&B (Kannada)

Image
 Manu and Priya are lovers. The story of the first part is about how the action taken by Manu, who wishes to change their lower-middle-class standard of living to one suitable for Priya, turns their lives upside down. Rakshit Shetty and Rukmini Vasanth have truly lived their characters. There weren't many explicit romantic scenes between them, yet they score with their eyes alone. All the characters in the story have been perfectly cast. Since we are not familiar with Kannada actors, we are able to watch the film without any judgment about them. The film, which started in a conventional manner, makes us realize how deeply it has pulled us in by the time it ends. The film revolves around Rukmini Vasanth, and her acting reminds one of Sonia Agarwal in 7G Rainbow Colony . Side B The second part starts from where the first part ended, with several major twists. Rakshit Shetty changes to the point of being unrecognizable in this part. Frankly speaking, his hairstyle in the first part se...

Sapta Sagaradaache Ello - Side A&B (Kannada)

Image
 திரைப்பட விமர்சனம் எழுதி கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. பல படங்கள் பார்த்தாகிவிட்டது இந்த இடைவெளியில். தன்னுடைடைய மலரும்  நினைவுகளின் வழியே கதை சொல்கிறேன் என்று அந்த காலகட்டத்திற்கேற்ற கதையை  "இட்லி கடை" என்ற பெயரில் இயக்கி நம் பொறுமையை சோதித்த தனுஷ். "முற்போக்கா சிந்திங்க" என்று நம் அனைவருக்கும் "Dude" ஆக  Advice செய்து விட்டு தான் மட்டும் கதாநாயகியை நினைத்து இதயம் முரளி போல உருகுவேன் என்று ஏமாற்றிய பிரதீப் ரங்கநாதன். முதல் பாகத்தை விட மிரட்டலாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வெளிவந்திருக்கும் காந்தாரா 2. இன்னும் பலப்பல திரைப்படங்கள். இவற்றுக்குக்கெல்லாம் விமர்சனம் செய்ய வேண்டும் என்று தோன்றாத எனக்கு " Sapta Sagaradaache Ello - Side A&B (Kannada)"- ஐ பார்த்த போது தோன்றியது. "ஏழுகடல் தாண்டி" என்று அறியப்படும் இப்படத்தை பார்க்குமாறு recommendations பல நாட்களுக்கு முன்பிருந்தே வந்த வண்ணம் இருந்தது என்றாலும் இப்போதுதான் அதற்கு நேரம் வந்தது போலும். மனுவும், ப்ரியாவும் காதலர்கள். Lower Middle Class வர்கத்தில் வாழும் தங்களி...

குபேரா

Image
தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா நடிப்பில் தெலுங்கு பட குழுவினரால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரு சேர எடுக்கப்பட்டு  வெளி வந்திருக்கும் திரைப்பாடம் "குபேரா". வழக்கமான பாணியில் வில்லன் அரசியல் வாதி டீல் பேசும் காட்சியோடு தொடங்கும் இப்படம் தனுஷ் வரும் வரை அதே பாதையில பயணிக்கிறது. அதன் பின் நாம் யூகிக்கும் காட்சிகளோடும் கதையோடும் திரைப்படம் நகர்கிறது வழக்கத்தை விட மிக மெதுவாகவே! கிட்டத்தட்ட இடைவேளைக்கு மிக அருகில் கதை வரும் வேளையில் என்ட்ரி கொடுக்கிறார் கதாநாயகி இல்லை இல்லை மறுமொரு கதாபாத்திரமான ராஷ்மிகா..அங்கிருந்து கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. இயக்குனரும் இஷ்டத்திற்கு "Cinematic Liberty" ஐ காட்சி அமைப்பில்  கையாள்கிறார் இருப்பினும் படம் வித்தியாசமான பாதையிலேயே பயணித்து முடிகிறது. அசுரன், ராயன், கர்ணன் போன்ற படங்களில் நாம் பார்த்த தனுஷிற்கு சற்றும் பொருந்தாத கதாபாத்திரத்தை ஏற்று அதை மிகச் சிறப்பான முறையில் நடித்திருக்கிறார் தனுஷ். இவர் எப்போ ஹீரோவா மாறுவர் என்று வன்முறை பிடிக்காத என்னைப் போன்றவரையே யோசிக்க செய்து விட்டார். சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஆனால் நாகர்ஜூனாவ...

Stolen - Hindi Movie

Image
சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளி வந்த திரைப்படம் "Stolen".   இத்திரைப்படத்திற்கு நல்ல ரேட்டிங் இருந்ததாலும் சமூக வலைத்தளங்களிலும் இதைப்பற்றிய சலசலப்பு சற்று அதிகமாக இருந்ததாலும் சரி பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன். நடு இரவில் ரயில்வே பெஞ்சில் உறங்கிக் கொண்டிருக்கும் "Jhumpa" வின் 5 மாத பெண் குழந்தை  களவு போகிறது. அவ்விடத்தில் எதிர்பாரா விதமாக மாட்டிக்கொள்ளும் இரு சகோதரர்கள் காவல்துறையை நம்பாமல் எவ்வாறு குழந்தையை மீட்டெடுக்க உதவுகிறார்கள்?!  இதற்கிடையில் குழந்தையை பறிகொடுத்தவளைப் பற்றி போலீசார் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையா?!  ஒரு விஷயத்தை நன்கு அறிந்து கொள்ளாமல் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும் அதைப்பார்த்த இளைஞர்கள் உடனேயே குற்றவாளிகளை தண்டிக்கும் நீதிமான்களாக மாறுவதும் அதனால்  ஏற்படும் விபரீதங்கள் என்னென்ன என்றும் இந்த ஒன்றரை மணி நேர திரைப்படத்தில் மிக நேர்த்தியாகக் கூறியிருக்கிறார் இயக்குனர் கரண் தேஜ்பால். "Stree" படத்தில் நடித்த அபிஷேக் பானெர்ஜிக்கு இதில் மிக வித்தியாசமான கதாபாத்திரம். அவர் தம்பியாக வருபவர், காவல் அதிகாரி என்று விரல் விட்டு எண்ணக்கூ...

விடாமுயற்சி

Image
"மனிதம் மனம் ஒரு குரங்கு" இந்த வாசகம் தான் எத்தனை  உண்மை என்பதை எனக்கு உணர்த்திய திரைப்படம் 'விடாமுயற்சி". என்ன ஒரே குழப்பமாக உள்ளதா?! விளக்குகிறேன் வாருங்கள் 😀 நமக்கு தான் படத்தோடு சேர்ந்து Live Commentary கொடுப்பது, இதற்கு அடுத்து இதுதானே வரும் என்று யூகிப்பது எல்லாம் கை வந்த கலை ஆச்சே!!! மாஸ் ஹீரோக்களின் படங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. பொதுவாகவே முன்னணி ( (வயது முதிர்ந்த)  கதாநாயகர்களின்படங்களை பார்க்கும் போது நம்மில் எழும் சில  எண்ணங்கள் 👇👇👇 1. எதுக்கு இப்பிடி ஹீரோயிச காட்சிகளை Scene By Scene வைக்கணும், Punch Dialogue பேசி கொல்லனும்?! - அஜித் இப்படத்தில் இவை எதையும் 90% கையாளவில்லை 2. வயதிற்கு ஏற்ற வேடத்தில் நடிக்கலாமே?!  3. எதுக்கு Young Heroines கூட நடிக்கணும்?! 4. Lip Sync கூட சரியா செய்ய தெரியாத North Indian Actors ஐ வில்லனா போட்டா ஒரு ஒரிஜினாலிட்டி-ஏ இல்லை! 5. எல்லா Crimes -ம் இந்தியால தான் நடக்கணுமா?! நம்முடைய Pulse -ஐ நன்கு அறிந்த இயக்குனர் மேற்கூறிய விஷயங்களை கவனமாக தவிர்த்திருந்தார் ஆனால் விடாமுயற்சி படத்தை பார்த்த போது விடாமல் எண்ணில் ஓடிய "Min...

விடுதலை 1 & 2

Image
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், கௌதம் மேனன், ராஜீவ் மேனன். இளவரசு மற்றும் பல்வேறு அபிமான நட்சத்திங்களின் நடித்து  இளையராஜா இசையில் 2023-ம் ஆண்டில் விடுதலை பாகம் ஒன்று வெளியானது.  "வழி நெடுக காட்டு மல்லி" என்று இளையராஜாவின் குரலில் வந்த பாடல் தாறுமாறாக ட்ரெண்டிங் ஆனதில் அனைவருக்கும் இப்படம் அறிமுகமானது.  தொடர்ச்சியாக இதன் இரண்டாம் பாகம் 2024 டிசெம்பரில் வெளிவர இவ்விரு பாகங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக Amazon Prime-ல் சமீபத்தில் பார்த்தேன் அதன் விளைவே இந்த விமர்சனம்! விடுதலை 1 மலைக்கிராமத்தில் போலீஸ் டிபார்ட்மெண்டில் ஜீப் Driver ஆக வேலை கிடைக்கப்பெற்று அங்கு வரும் சூரி-யின் குரல் வழியே 80-களில்  கதை பயணிக்கிறது. மக்கள் படை என்ற இயக்கம் தீவிரவாத இயக்கமாக அரசால் முத்திரை குத்தப்பட்டு அதன் தலைவரான வாத்தியார் என்னும்  பெருமாளை காவல் துறை முகாம் அமைத்து தீவிரமாக தேடி வருகிறது. சமீபத்தில் நடந்த ரயில் குண்டுவெடிப்பு அவர்களின் கைவண்ணமே என்று கண்டறியப்பட்டு அவ்வியக்கத்தை ஒடுக்கிய ஆக வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு அரசால்  தள்ளப்பட்ட காவல் துறை தங்களு...

மெய்யழகன் Vs லப்பர் பந்து

Image
  மெய்யழகன்  லப்பர் பந்து  C.பிரேம் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி, கார்த்தி மற்றும் பல அபிமான நட்சத்திரங்கள் நடிப்பில் செப்டம்பர் மாதம் திரைக்கு வந்து வெற்றி நடை போடுவதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம். அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் செப்டம்பர் மாதம் திரைக்கு வந்து வெற்றி நடை போட்ட திரைப்படம்.  படத்தின் முழுக் கதையும் இரு ஆண் கதாபாத்திரங்களை சுற்றியே நகர்கிறது  இளமைக்காலத்தில் இவ்விரு கதாபாத்திரங்களும் சந்தித்திருப்பதாகவும் மறுபடியும் நிகழ்காலத்தில் சந்திப்பதாகவும் காட்டப்படுகிறது  80, 90-களில் வெளிவந்த திரைப்பட  பாடல்களை பின்னணியில் இசைக்க விடுவது இன்றைய ட்ரெண்ட்..இரண்டு திரைப்படங்களிலும் இதைக் காணலாம்  இரு முக்கிய  கதாபாத்திரங்களை இணைக்கும் common factors  ஊரும் உறவுகளும் அவைகளின் மேல் அவர்கள் கொண்டிருக்கும் பாசமும் நட்பும்  இரு முக்கிய கதாபாத்திரங்களை இணைக்கும் common factor கிரிக்கெட்டின் மேல் அவர்கள் கொண்டிருக்கும் தீராக்காதல் என்று நமக்குத் தோன்றினாலும் அவர்களின் குடும்பத்தினர் மேல் கொண...

மெய்யழகன்

C.பிரேம் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி, கார்த்தி மற்றும் பல அபிமான நட்சத்திரங்களின் நடிப்பில் செப்டம்பர் மாதம் திரைக்கு வந்து வெற்றி நடை போடுவதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் "மெய்யழகன்". படம் பார்த்த ஒரு சாரார் " மூணு மணி நேரம் சொன்னதையே சொல்லி கழுத்தறுத்துட்டாங்க", "Whatsapp forward மாதிரி இருந்துச்சு", "இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் எங்க இருக்குறாங்க?",  "Emotions - ஐ காட்றேன் என்று ரொம்ப ட்ராமா பண்ணிட்டாங்க" போன்ற விமர்சனங்களை முன் வைக்க... மறு சாரார் "குடும்பத்தோட உட்கார்ந்து பாக்குற மாதிரி தரமான படத்தை எடுத்திருக்காங்க", "பல இடங்கள்ல அழ வச்சுட்டாங்க", "எல்லாரும் அருமையா நடிச்சிருக்காங்க" போன்ற நேர்மறை விமர்சனங்களை முன் வைக்க..Netflix-ல் வெளிவந்த இப்படத்தை பார்த்த என் கருத்து இந்த இரு சாரரோடும் ஒத்துப் போனது!!! என்னைப் பொறுத்தவரை "மெய்யழகன்" திரைப்படத்தை  ஒரு புத்தகம் வாசிக்கும் அனுபவத்தோடு மட்டுமே ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தன்னுடைய Inner emotion - களுடன் தொடர்பற்ற ஒருவனாக தன்னை வெளிக்காட்டிக் ...

வாழை

Image
"வாழையடி வாழையாய் வாழ்வாங்கு வாழ்க" "வாழை குலை தள்ளுவது போல உங்கள் குலம் தழைக்கும்" என்று வாழையை நல் வாழ்விற்கு ஆதாரமாய் மட்டுமே  பார்த்துப்  பேசிப் பழகிய நமக்கு வாழையையே தங்களின் வாழ்வாதாரமாக நம்பும் மக்களின் பசி, ஏமாற்றம், கனவு, காதல் மற்றும் சோகம்  கலந்த வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக  நமக்கு படம் பிடித்துக் காட்ட முயன்று வென்றிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்!!! உண்மைச் சம்பவத்தை கதைக் கருவாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் சிவனைந்தன் என்னும் 13 வயது இளைஞன். அவனை ஒட்டி நகரும் கதை அவன் மிக விரும்பும் பள்ளி வாழ்க்கையையும், விடுமுறை நாட்களில் அவன் செய்யும்  (சற்றும் பிடிக்காத)  காய் சுமக்கும் வேலையையும் சுற்றி நகர்கிறது. பூங்கொடி டீச்சர் மேல் அவனுக்கு ஏற்படும் ஈர்ப்பை இயக்குனர் அடிக்கடி  கோடிட்டு காட்டுவது சற்று களைப்பை தந்தாலும் நடுநடுவே அம்மா மற்றும் அக்காவுடனான எமோஷனல் காட்சிகளை Subtle ஆக காமித்து கண்களில் கண்ணீர் வரவைக்கிறார். தங்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள் என்று தெரிந்தும் தான் வாங்கிய முன் பணத்திற்காக  உ...

பரியேறும் பெருமாள்

இயக்குனர் மாரி செல்வராஜின் முதல் படைப்பான  "பரியேறும் பெருமாள்" இயக்குனர் ரஞ்சித்தின் தயாரிப்பில் , சந்தோஷ் நாராயணனின் இசையில் வெளிவந்திருக்கிறது. படத்தின் தலைப்பையும், போஸ்டர், டீஸர் ஆகிவற்றை பார்க்கும் போதும் படத்தின் மூலக்கதையை நம்மால்  ஓரளவு யூகிக்கிக்க முடிகிறது...நம் யூகமும் ஓரளவிற்கு சரியாகவே இருப்பினும் நம்மால் நினைத்தும் பார்க்கமுடியாத சிறு சிறு நுணுக்கங்களை திரைக்கதையில் புகுத்தி படத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்கிறார் அறிமுக இயக்குனர். படம் தொடங்கியதும் வரும் "கருப்பி " பாடல் மேற்கத்திய "Rap" ஸ்டைலில் எழுதி பாடியிருக்கிறார்கள். கேட்டதும் "என்ன பாட்டு இது " என்று தோன்றினாலும் பாடல் முடியும் பொழுது "நல்லா இருக்கே " என்று எண்ண வைக்கிறது. பின்தங்கிய மக்கள் வாழும் கிராமத்தில் இருந்து சட்டக்கல்லூரியில் படிக்க வரும் மாணவனாக கதிர் கனகச்சிதம். "பரியேறும் பெருமாள் " கதாபாத்திரத்தின் மேல் அனாயசமாக  ஏறி  சிம்மாசனம் போட்டு அமருகிறார் (நம் மனதிலும் கூட !!!). கோபம், சிரிப்பு, சோகம், பயம், ஏமாற்றம், அதிர்ச்சி  என்று அனை...

Making Of GOAT - Movie Review

Image
முன்னணி ஹீரோக்களின் படம் வருகிறதென்றாலே ஒரு எதிர்பார்ப்பு அனைவரையும் தொற்றிக்கொள்கிறது. படம் சூப்பராக இருக்க வேண்டும் என்று ரசிகர்களும், குறைந்தபட்சம் பார்க்கும் படியாவது  இருக்க வேண்டும் என்று  மற்றவர்களும் எதிர்பார்க்கிறார்கள் மொத்தத்தில் எதிர்பார்ப்பு இருப்பது உண்மை தான். "இளைய தளபதி அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டார் அவரின் கடைசி படத்திற்கு முந்தைய படம் என்பதால் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும்  (அவர் இதுவரை நடித்த படங்களை எல்லாம் ரசிகர்களுக்கு நினைவு படுத்த வேண்டும்) " என்று நடிகருக்கு நெருங்கியவர்கள் முடிவெடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவை அணுகி இருப்பார்கள் போல அதனுடைய விளைவு 👇👇👇 படத்திற்கு நல்ல செலவு  செஞ்சு Hollywood படம் மாதிரி இருக்கனும் - கூப்பிட்றா AI Team-அ!! அப்பா. மகன், ஹீரோ, வில்லன்-ன்னு படம் முழுக்க இளைய தளபதி தான் வரணும் ஆனால் அவரே வர்றாருன்னு Fans பீல் பண்ணக்கூடாது  - No Worries அதான் AI இருக்கே !! இளைய தளபதிக்கான ஓட்டு வங்கி எங்கு உள்ளது?! இப்போது 35-45 வயது வரம்பில் இருக்கும் அவரின் வசீகரா, கில்லி போன்று 2000-ம் ஆண்டின் தொடக்கங்களில் வெள...

மகாராஜா

Image
திரில்லர் படங்கள் இரண்டு விதம்.  முதல் வகை -  தட்டில் கவிழ்த்த நூடுல்ஸ் போல பல்வேறு கதாபாத்திரங்கள் பிண்ணி பிணைந்து ஒரே நிகழ்வை நோக்கிச் செல்லும் அனைவருமே சம்பவத்தில் சம்மந்தப் பட்டவர்களாகவே தோன்றுவார்கள். இரண்டாம் விதம் - நால்வழி சாலையில் செல்லும் வாகனங்களைப் போல  ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல்வேறு கேரக்டர்-களை இயக்குனர் அறிமுகப்படுத்திக் கொண்டே செல்வார் அவர்களுள் யார் குற்றவாளி என்று படம் செல்லச் செல்ல புலப்படும். மஹாராஜா இதில் இரண்டாவது ரகம். பற்றாக்குறைக்கு Non - Linear முறையில் கதை சொல்கிறேன் பேர்வழி என்று அதீத குழப்பம் நமக்குத் தான். இன்றைய தேதியில்  பெரும்பாலோனோருக்கு படத்தின் கதை தெரிந்திருக்கும் எனினும் Spoiler இல்லாமல் எழுதுகிறேன். படம் தொடங்கி தனது வழக்கமான பாணியில் நடிக்கும் விஜய் சேதுபதியைப் பார்க்கும் போது சற்று Cringe ஆகத்தான் இருந்தது ஆனால் அதுதான் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாய்ண்ட் ஏனென்றால் அடுத்த என்ன வரும் என்ற நமது யூகத்திற்கு அது மிகப்பெரிய தடையாக இருந்து படத்தின் சஸ்பென்ஸை தக்க வைக்க உதவுகிறது. முன்னும் பின்னுமாக நகரும் கதையும் screenplay-ல் ...

அக்னிச் சிறகுகள்- புத்தக விமர்சனம்

Image
முன்னாள் ஜனாதிபதி, விஞ்ஞானி, முனைவர் ஆ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களுடன் உரையாடி சேகரித்த தகவல்களை ஒருங்கிணைத்து அருண் திவாரி எழுதிய " Wings Of Fire" புத்தகத்தின் தமிழாக்கம் தான் " அக்னிச் சிறகுகள் " கண்ணதாசன் பதிப்பகம் 2004-ம் ஆண்டில் பிரசுரித்த இப்புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் மு.சிவலிங்கம். கவிதைகளை கவிஞர் புவியரசு மொழியாக்கம் செய்துள்ளார். உள்ளூர் நூலகத்தில் கிடைத்த இந்த பொக்கிஷத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அப்துல் கலாம் ராமேஸ்வரத் தீவில் 1931-ம் வருடம் பிறந்ததிலிருந்து  தொடங்கும் புத்தகம் அவரின் அறுபது கால வாழ்க்கையை நமக்கு மிக விரிவாக விளக்குகிறது. அவரின் தொடக்கப்பள்ளி படிப்பு, பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் என அனைவரின் குணாதிசயங்களையும் எடுத்துரைத்த வண்ணம் செல்லும் இப்புத்தகம் பின் ராமநாதபுரத்தில் அவரின் உயர்நிலைக்கல்வி, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் Intermediate பின் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் என்று தொடர்கிறது. தன்னுடைய தொடக்க காலத்தில் அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று முரணானது என்று எண்ணிக் கலங்கும் கலாம்  தன்ன...

Laapataa Ladies - Hindi Movie

Image
"இறுக பற்று" திரைப்படத்திற்குப் பிறகு பலரும் என்னை பார்க்கச் சொல்லி, விமர்சனம் செய்ய வேண்டி பரிந்துரைத்த திரைப்படம் இந்த " Laapataa Ladies". மத்திய பிரதேசத்தில் எங்கோ மூலையில் வாழும் விவசாயி தீபக் தனது புது மனைவி Phool உடன் இரண்டு நாள் மாமியார் வீட்டில் விருந்தை முடித்து விட்டு தனது சொந்த கிராமத்திற்கு டிரக், ட்ரெயின் என்று பிரயாணம் செய்து ஊர் திரும்புகிறான். நடு இரவில் கும் இருட்டில் தலையில் முக்காடு போட்டிருந்த வேறு ஒரு மணப்பெண்ணை தனது மனைவி என்றெண்ணி தவறுதலாக வீட்டிற்கு அழைத்து வர அவன் வாழ்க்கையில் பின் என்ன நடந்தது என்பது தான் கதை. "அவனோடு தவறுதலாக தெரிந்தே வரும் மணப்பெண் ஜெயா/புஷ்பா - வின் நோக்கம் என்னவாக இருக்கும்?!" என்று யூகித்து யூகித்து சோர்ந்து விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டுமில்லாமல் திரைக்கதை செல்லும் வழியையும் நம்மால் கணிக்கவே முடியவில்லை. அடுத்ததாக நடிகர்களின் தேர்வு என இவை அனைத்தும் தான் இப்படத்தை நோக்கி பலரை ஈர்த்த காரணங்கள் என்று சொல்ல வேண்டும். மிக சொற்பமான கதாபாத்திரங்களையும் ஒரு வரி கதையையும் வைத்துக் கொண்டு பார்வையாளர்கள...

Manjummel Boys - Malayalam

Image
பட்டி தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பி விட்டு கடைசியாக இன்னும் படம் பார்க்காமல் காத்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்காக ஹாட்ஸ்டார் தளத்தில் வந்திருக்கிறது  'Manjummel Boys"!!!  படம் வெளிவந்து சில மாதங்கள் ஆகிவிட்டதாலும், வெற்றிப் படம் என்ற அந்தஸ்தைப் படம் பெற்று விட்டதாலும், படத்தின் கதை படம் பார்ப்பதற்கு முன்னே நமக்கு தெரிந்துவிட்டதாலும் விமர்சனம் என்று எதுவும் சொல்வதற்கு இல்லை அப்படியே எழுதினாலும் அவை நான் கேட்டு பார்த்த சமூக வலைதள கருத்துக்களால் பாதிக்கப்பட்டதாகவே (Biased) இருக்கும் என்பதால் என்னைக் கவர்ந்த காட்சிகளையும் கதை நகர்வை மட்டுமே உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். கேரளாவின் Manjummel என்ற கிராமத்தில் இருந்து கொடைக்கானல் செல்லும் இளைஞர்கள் குழு என்னென்ன ஆட்டம் போட முடியுமோ அத்தனையும் ஒன்று விடாமல்  செய்து விட்டு முடிவில் குணா குகைக்கு செல்ல  அங்கிருக்கும் குழியில் அவர்களில் ஒருவன் தவறி விழுகிறான் பின் நண்பனால் காப்பாற்றப் படுகிறான்.இந்த ONE Liner-யை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வாறு இரண்டு மணி நேர படத்தை  எடுத்திருப்பார்கள்  என்ற ஆர்வ...

Premalu (Malayalam)

Image
 "Manjummel Boys" OTT-ல் வெளிவருமா? வராதா? என்ற விவாதம் ஒரு புறமிருக்க இதோ அதோ என்று ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த "Premalu" டிஸ்னி ஹாட்ஸ்டார்-ல் ஒருவழியாக காணக்கிடைக்கிறது. மொக்க மலையாளப் படங்களையே விடாமல் பார்க்கும் எனக்கு சொல்லவா வேண்டும் அது மட்டுமில்லாமல் பல்வேறு படங்களில் Supporting ரோலில் வந்து விட்டு இதில் கதாநாயகனாக நடித்திருக்கும் Naslen. யதார்த்தமான நடிப்பா அல்லது பக்கத்து வீட்டு தம்பி போன்ற பாவமான தோற்றமா? என்னவென்று தெரியவில்லை பிடிக்கும்!! வழக்கமான மலையாள திரைப்படங்களைப் போல இதிலும் கதை என்ற  ஒன்று பெரிதாக இல்லை. ஒன்றுக்கும் உதவாத ஹீரோ காதலில் விழும் "Premam" "Hridayam" படங்களை நினைவுபடுத்தும் கதை தான் ஆனால் ஒரு காலகட்டத்தில் மட்டும் நடந்து முடிந்து "Autograph" Feel இல்லாமல் நம்மை காப்பாற்றுகிறது. படத்திற்கு பெரிய Plus Point ஏ அங்கங்கே Chat Masala போல தூவப்பற்றிருக்கும் நகைச்சுவை. கலகல வென்று சிரிக்கவில்லை என்றாலும் படம் முழுக்க ஒரு புன் முறுவல் உங்கள் முகத்தில் தவழ்ந்து கொண்டுதான் இருந்திருக்கும். Amal Davis ஆக வரும் சங்கீத...

Canada 2 Charlotte By Car - Finale - Hershey Chocolate Factory and Luray Caverns #road_trip #travalogue

Image
It is time for us to drive back to Charlotte, NC. The total driving time is almost 12 hours. Heart and soul filled with the Serene beauty of Niagara Falls we started our drive towards Williamsport, Pennsylvania . We had plans to visit couple of places on our way back instead of driving straightly which might bore the kids. After driving almost 4hrs we reached our Hotel room. It was a tiring night especially for those who drove all the way after a heavy day of sight seeing. Next morning kids were very excited as we were about to visit "Hersey Chocolate World" . The Hersey Park has Amusement Park too. But we didn't plan for it. We purchased the tickets for the Chocolate World online as some discounts were available. Most of the attractions were indoor and timed except the bus tour of Hersey Town. I wouldn't really suggest this place as the tickets were pricey and felt like a rip off compared to Disney Parks. Kids too lost interest after some time and they only keen on g...

Charlotte 2 Canada by Car - Niagara Falls, Ontario #road_trip #travalogue

Image
Next Morning We were all excited for couple of reasons. The first one is that our trip is almost coming to an end. Yes, we were all home sick and tired of crashing at hotel rooms and eating outside food, The second reason is that we were about to witness the beauty of the elegant yet Grand "Niagara Falls" This is my 6th time visiting Niagara Falls and the very first time from the Canadian Side. That first glimpse never cease to amaze you. Such a treat to our senses. 1 hour drive from Mississauga felt like forever. We reached Niagara Falls just before noon and paid parking was available everywhere. We enquired about tickets available as a bundle but that didn't interest us. we went ahead and purchased tickets for " Hornblower Niagara City Cruise" Canadian version of " Maid of the Mist". I had the same experience as of my pervious visits, Hornblower Niagara City Cruise After this we didn't rush to any attractions but enjoyed our afternoon looking at ...

Parking (Tamil)

Image
 சில திரைப்படங்களின் கதையே எதிர்பாரா திருப்பங்களுடனும் முன்னும் பின்னும் பரபரப்பாக நகரும் நிகழ்வுகளுடனும் சுவாரசியமாக இருக்கும். இப்படிப்பட்ட படங்களுக்கு திரைக்கதை அவ்வளவு முக்கியம் இல்லை ஆனால்  சில திரைப்படங்களின் கதையோ ஒரு வரியில் சொல்லக்கூடியதாக இருக்கும் இயக்குனரும் அதை தொடக்கத்திலேயே பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்தி விடுவார் அவ்வளவு ஏன் ட்ரைய்லர், Sneak Peek-லேயே நாம் தெரிந்து கொண்டுதான் படம் பார்க்கவே செல்வோம் அப்படிப்பட்ட படங்களுக்கு திரைக்கதையும் பொருத்தமான நடிகர்கள் தேர்வும் மிக அவசியம் அவைகளால் மட்டுமே  பார்வையாளர்களை இரண்டு மணி நேரம் திரையங்குகளில்  அமர வைக்க இயலும். இதில் "Parking" இரண்டாவது ரகம். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் நடிகர்களை வைத்துக் கொண்டு, Easy ஆக கணிக்கக்கூடிய திரைக்கதையையும் எழுதி விட்டு  Commercial Elements என்று கூறிக்கொண்டு கதைக்கு தேவையற்ற மசாலாக்களை சேர்க்காமல் அனைவரும் ரசிக்கும் வண்ணம் திரைப்படத்தை கொடுத்திருக்கும் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணாவிற்கு பாராட்டுக்கள். அளவற்ற கோபம் பழி உணர்ச்சியைத் தூண்டும் அதுவே மனிதனை மிருகம...